24 special

ஒரே வார்த்தை அலறிதுடிக்கும் ஒட்டுமொத்த திராவிட கும்பல்கள்....! முடிவோடதான் இருக்காரு...!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

லண்டன் பயணத்தை முடித்துவிட்டு நேற்றைய முன்தினம் சென்னை திரும்பிய அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சமயம் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, 'முதலில் திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார் அவர் வருவதற்கான தேதிகள் முடிவானதும் அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறினார். 


அந்த சமயத்தில் பிரபல பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை ரகசியமாக  லண்டனில் நீங்கள் சந்தித்ததாக ஒரு தகவல் வெளியாகிறது அது பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

உடனே அண்ணாமலை, 'அந்த தகவலை யார் கூறினார்? ஒரு பொதுவெளியில் ஒரு பத்திரிக்கையாளராக கேட்கும் பொழுது தகவல் என்று எப்படி கூறலாம்? முதல்வர் ஸ்டாலின் தங்களை அழைத்து இந்த தகவலை கூறினாரா? அல்லது ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா அம்மா உங்களை அழைத்து இந்த தகவலை கூறினாரா? கூறுங்கள் நான் கேள்வி கேட்கிறேன் அதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும், ஒரு கேள்வி கேட்கிறீர்கள் நான் மறு கேள்வி கேட்கிறேன் அதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும் அல்லவா அப்படி இருக்கும் பொழுது யார் அந்த தகவலை கூறினார் என்பதை கூறுங்கள்' என சகட்டு மேனிக்கு அந்த பத்திரிகையாளரை கேள்வி கேட்க இந்த அந்த இடமே பரபரத்தது!

அண்ணாமலை இந்த கேள்விகள் கேட்ட விவகாரம் அறிவாலயம் வரை சென்று சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அண்ணாமலையால் டென்ஷனாக இருக்கும் டி ஆர் பாலு இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி ஆர் பாலு கூட்டத்தில் பதட்டத்துடன் என்னால் பேச முடியவில்லை என்று கொதித்துள்ளார்.  

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் பொன்னேரி கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுத்தூண் வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் டி ஆர் பாலு. அப்பொழுது பேசும்பொழுது சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளிப்பதை பற்றி கூறி ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினால் ஆமாம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே தேவையில்லாமல் ஆதாரங்களை அவர்களிடம் கேட்கக் கூடாது அடிப்படை விஷயங்கள் கூட அவருக்கு தெரியவில்லை, மேலும் உனக்கு யார் அந்த தகவலை சொன்னது முதல்வரா என்று முதல்வரின் பெயரை கூறியது கூட பரவாயில்லை அவர் கட்சியின் தலைவராக உள்ளார் பொது வாழ்வில் உள்ள மனிதர், ஆனால் என்னுடைய அன்பு சகோதரி துர்கா ஸ்டாலினை அவர் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிடுவதற்கு காரணம் என்ன பொது வாழ்வில் சம்பந்தப்பட்ட மனிதர் அல்ல அவர், அரசியலிலும் அவர் இல்லை அப்படி இருக்கும் பொழுது அவரது பெயரை ஏன் அண்ணாமலை கூற வேண்டும்?

நான் சாதாரண ஆளாக இருந்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் பேசி இருக்கலாம் ஆனால் தற்போது பதவிகளில் இருப்பதால் எதுவும் பேச முடியாமல் போயிட்டு என்னுடைய ரத்தம் எல்லாம் கொதிக்கிறது சூடாகிறது என ஆக்ரோஷமாக மேடையில் புலம்பியுள்ளார் டி ஆர் பாலு.அண்ணாமலை சொன்ன ஒற்றை வார்த்தை அறிவாலய வட்டாரங்களில் பற்றி எரிகிறது!