திமுக எப்பொழுதும் தன்னை சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்றும் சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி என்றும் தன்னை கூறி வந்தது. மேலும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியே அதிக அளவில் தன் பக்கம் கவர்ந்து வைத்திருந்தது.
திமுக 2021இல் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய ஓட்டு வங்கியாக செயல்பட்டது சிறுபான்மையினரே என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை காலங்காலமாக சிறுபான்மையினரை தன் பக்கம் வைத்து கொள்ள திமுக இதுவரை இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி போன்றவற்றிற்கு எந்த ஒரு வாழ்த்துக்களையும் தெரிவிக்காமல் உள்ளது! அதுவே சிறுபான்மையினர் விழா என்றால் முதல் பதிவு திமுகவாக இருக்கும்!
ஒரு கட்சி ஒரு குறிப்பிட்ட பகுதியினரை பாதுகாக்க உருவாக்கப்பட்டது என்றால் அதில் தவறு இல்லை ஆனால் ஒட்டு மொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளரை முதல்வராக தேர்ந்தெடுத்து ஆட்சியை ஆள்வதற்கு பொறுப்பை கொடுத்த பொழுதிலும் அனைத்து மக்களையும் சமமாகவும் அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்காமல் சிறுபான்மையினரை மட்டுமே திமுக கருத்தில் கொண்டு வந்தது அரசியல் வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் 2021 ஆட்சி அமைத்த திமுக தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது அதிலும் குறிப்பாக திமுகவினர் தன் சொந்த கட்சியினராக நினைக்கும் சிறுபான்மையினரும் திமுக மீது கடும் அதிருப்திகளை பெற்றுள்ளனர்.
ஏனென்றால் திமுக தேர்தல் வாக்குறுதியில் சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டிய சில உறுதிகளையும் சிறுபான்மையினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் அவை எதையும் திமுக இது வரை நிறைவேற்றாமல் இருப்பது சிறுபான்மையினர் மத்தியில் கடும் அதிருப்திகளை பெற்றது.
இதனால் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி திமுகவினருக்கு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் கூட எஸ்டிபிஐ கட்சி தரப்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு அக்கட்சி தலைமை எடப்பாடி அழைத்ததும் அறிவாலய தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இஸ்லாமிய சமுதாயத்தினர் அதிமுக பக்கம் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக தரப்பிற்கு மற்றொரு அதிர்ச்சி தரும் விதமாக கிறித்தவர்கள் தற்பொழுது பாஜக பக்கம் படையெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற இருபதாவது அருமனை பொங்கல் விழா பாஜக சார்பில் நடைபெற்றுள்ளது அதில் கிறிஸ்தவ மதபோதகர் டாக்டர் மனோஜ் அவர்களின் மகளான அனுஷ்கா கலா கமல் அவர்கள் ஐயப்பனின் பாடலை பாடியுள்ளார்.
அதுவும் கன்னியாகுமரி மாவட்ட சமூக ஊடகப்பிரிவு தலைவர் பொங்கல் விழாவை அறிமுகப்படுத்தி துவங்கி வைத்துவிட்டு கிறிஸ்தவ மத போதகரின் மகளை ஐயப்பனின் பாடலை பாட மேடைக்கு அழைத்தார். மேடையில் வந்த பெண்ணும் ஐயப்பனின் பாடலை பக்தி உடன் பாடியது சமூக வலைதளம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே இஸ்லாமியர்கள் திமுகவை விட்டு விலகி வரும் நிலையில் தற்போது கிறிஸ்தவர்களும் படிப்படியாக திமுகவை விட்டு விலகி வருவது அறிவாலய தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இப்பொழுது பாஜகவின் பொங்கல் விழா மேடையில் கிறிஸ்தவ மத போதகரின் மகள் ஐயப்ப பாடலை பாடிய வீடியோவும் அறிவாலய தரப்பினர் தலையில் துண்டை போடவைத்துள்ளது. முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட்ட கிறிஸ்மஸ் விழாவிலும் பிரதமர் முக்கிய கிறிஸ்தவ மதபோதகர்களை அழைத்து அவர்களிடம் உரையாடியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்ற நிலையில் தற்போது பாஜக பக்கம் கிறிஸ்தவர்கள் படிப்படியாக திரும்பி வருவதும் திமுக சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை மொத்தமாக தன்னிடமே வைத்திருக்க இயலாது என்றும் கூறப்படுகிறது.