நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஒன்றுமே புதுமைகளை பெற்று வருகிறது எப்படி நாமும் நவீன இயந்திரங்கள் மற்றும் உலகத்திற்கு ஏற்றார் போல் மாறி வருகிரோமோ சினிமாவும் அதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது . ஆனால் முழுவதும் தமிழின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முழுமையாக விளக்கும் எந்த ஒரு படங்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது தமிழ் திரை உலகில் எந்த ஒரு இயக்குனராலும் கவனிக்க படாதது என்று தான் கூற வேண்டும்! ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தல் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சில படங்கள் எடுக்கப்பட்டு நம் மண்ணின் மகத்துவம் மற்றும் சிறப்புகள் போற்றப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் நிலவும் சில முக்கிய சம்பவங்கள், ஒரு குறிப்பிட்ட சமூகம் பிரிவு மற்றும் அந்த வருடத்தில் மிகவும் தீவிரமாக பேசப்பட்ட ஒரு கருத்தை வைத்து படத்தை எடுத்து வருகின்றனர்.
இன்னும் சில படங்கள் மிகவும் ஜாலியாக என்டர்டைன்மென்ட்டை மட்டுமே நோக்கமாக கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த வரிசையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் படும் அவலங்களை குறித்த படங்கள் நகைச்சுவை கலந்த திரில்லர் படங்கள், நகைச்சுவை படங்கள், முன் காலத்தில் நடந்த தவறுகள், ஆங்கிலேயர் அடிமைப்படுத்தி இருக்கும் பொழுது கவனிக்கப்படாமல் விடப்பட்ட சில துயரங்கள் மற்றும் உலகத்தில் இதுவரை நடைபெறாத ஒன்று நடைபெற்றால் எப்படி இருக்கும் என்பது குறித்த கதைகள் திராவிடம், கடவுள் மறுப்பு போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளே படமாக்கப்படுகிறது. இப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை எதிர்த்து படங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக இந்து மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்கள் தமிழரின் பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பல படங்கள் எடுக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஞ்சித் அவர்கள் குழந்தை C/O கவுண்டம்பாளையம் என்று ஒரு படத்தை எடுத்துள்ளார். அந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனராக மாறியுள்ள நடிகர்கள் ரஞ்சித் இந்த படத்தில் நாடக காதலை குறித்து பேசி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்தில் ஏற்பட்ட சில சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்ட படம் இது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வருகிறது அந்த எதிர்ப்புகள் யார் என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அதை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் தரப்பில் கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது நான் இந்த படத்தில் எதுவுமே தவறாக குறிப்பிடவில்லை குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தான் செய்யும் என்று ரஞ்சித் கூறியது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதோடு இடதுசாரிகள் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது! குறிப்பாக திமுக ஆதரவு நிலைப்பாடு இருக்கும் திரை உலக பிரமுகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது! இது நாள் வரை திமுக திரையுலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும்! தற்பொழுது மெல்ல மெல்ல அந்த கட்டுப்பாடுகள் தளர்ந்து வருவதும், குறிப்பாக கலைஞர் 100 நிகழ்ச்சியில் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கூடியும் ரசிகர்கள் கூட்டம் கூடாதது இனி திரை உலகைச் சேர்ந்தவர்கள் திமுகவிற்கு பிரச்சாரம் செய்தாலும் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற செய்தியை உணர்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் திமுக அதிர்ச்சியில் உறைந்து உள்ளது. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் நாடக காதல் என்ற வார்த்தையை கூறி இந்த படம் நாடக காதலை பற்றி பேசுகிறது எனகூறியது அரசியல் ரீதியாக சில இயக்கங்களை குறிப்பாக சிறுத்தைகளை குறிப்பிட்டு கூறுவதாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.