24 special

சுரேஷ்கோபி மகள் திருமணம்... பிரதமர் மோடி செய்த மாஸ்டர் வேலை!

pm modi , suresh gopi
pm modi , suresh gopi

நாட்டின் வடக்கு பகுதிகளில் பெரும்பான்மையாக தனது ஆட்சியை நிலை நிறுத்தி வரும் பாஜக தென்னிந்தியாவில் தனது நிலையை உறுதி செய்வதற்கு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கையாக தென் இந்தியா முழுவதும் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக தென்னிந்தியாவிற்கு தேவையான முக்கிய பல நலத்திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது. அதாவது கேரளாவில் தற்போது தொடங்கப்பட்ட பல நலத்திட்டங்கள் பரவலாக பேசப்படுகிறது அது மட்டும் இன்றி தமிழகத்திற்கு தேவையான பல நலத்திட்டங்களை பல கோடி மதிப்பில் தொடங்கி வைத்துவிட்டு பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி திரும்பினார். அதிலும் குறிப்பாக திருச்சியில் தற்போது புதிதாக கட்டப்பட்டு பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ள திருச்சி புதிய விமான நிலையம் தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு முறை பிரதமர் நரேந்திர மோடி தன் நிகழ்வான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பொழுது தமிழகத்தை குறித்து பேசாமல் இருந்ததே இல்லை எடுத்துக்காட்டாக 2019-ல் கடலூரின் இரண்டு பெரும் வீரர்களை குறித்தும் அவர்கள் நம் நாட்டிற்காக செய்த மிகப்பெரிய சாதனைகளை குறித்தும் தெரிவித்து பாராட்டை வழங்கியிருந்தார். மேலும் கடந்த சில வருடங்களாகவே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆக இருவரும் தமிழகத்திற்கு அவ்வப்போது வருகை தந்து வருகின்றனர் இவ்விருவரையும் தாண்டி மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழக மற்றும் தென்னிந்தியாவிற்கு அதிக முறை வருகை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் திருநாள், திருவள்ளுவர் தினம், கார்த்திகை தீபம் போன்ற தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பல விழாக்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் கூட எம்ஜிஆர் அவர்களின் நினைவு தினத்தை நினைவுகூர்ந்து அவர்களை குறித்து பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி! 

இந்த நிலையில் மீண்டும் இரண்டு நாள் பயணமாக நேற்று கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலையில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று வழிபட்டத்துடன் நடிகர் சுரேஷ கோபியின் மகள் திருமண விழாவிலும் கலந்து கொண்டார். இதற்காக பிரதமர் தங்கி இருந்த இடத்தில் இருந்து குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் ஏராளமான பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் கூடி பிரதமரை வரவேற்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதுமட்டுமின்றி பிரதமர் மோடி இந்த வருகையின் போது கேரள பாஜகவின் முக்கிய தலைவர்களையும் தமிழக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்துள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் தென்னிந்தியாக்களில் குறிப்பாக தமிழக மற்றும் கேரளாவில் பிரதமரின் விஜயம் என்பது அதிகமாக இருக்கும் என்ற பிரதமர் மோடியின் திட்டம் தற்பொழுது கசிந்துள்ளது. அதோடு இன்னும் இரண்டு தினங்களிலும் பிரதமர் மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்! அந்த வருகையை ஒட்டி பிரதமரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற வேண்டும் எனவும் தகவல்கள் பரந்துள்ளது, பிரதமரின் அந்த வருகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சி தலைவர் ஒருவர் பாஜகவில் இணையுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் இந்த முறை தென் தமிழகத்தை விடக்கூடாது என டெல்லி மேலிடம் முடிவு செய்து அதன்படியே பிரதமரின் விஜயம் மற்றும் அமித்ஷா அவர்களின் விஜயத்தை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.