24 special

அடிமேல் அடி எடப்பாடிக்கு மீண்டும் கிடைத்த அதிர்ச்சி வைத்தியம்!


தமிழக அரசியல் கணக்குகள் நாளுக்கு நாள் மாறி வருகின்றன, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தேர்வு செல்லாது என நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, அதிலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொது குழு கூட கூடாது எனவும் இருவரும் தனி தனியே பொது குழுவை கூட்ட கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்து இருப்பது எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் கனவிற்கு விழுந்த அடியாக பார்க்கபடுகிறது.


இந்த சூழலில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நீதிமன்ற தீர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது, எவ்வாறு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது என மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார், அப்போது மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை, கடந்த முறை பன்னீர் செல்வதை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என கேபி முனுசாமியிடம் சண்டைக்கு சென்றார் சண்முகம்.

அதற்கான நேரம் இதுவல்ல பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக நாம் அறிவித்தால் பெரும் பின்னடவை சந்திக்க வேண்டி இருக்கும் என பழனிசாமி மற்றும் முனுசாமி அமைதியாக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை மட்டும் மேற்கொள்வது என முடிவு எடுத்து இருந்து இருக்கின்றனர். ஆனால் இடையில் புகுந்து பன்னீர் செல்வதை கட்சியில் இருந்து நீக்குவதாக சிவி சண்முகம் கொடுத்த அழுத்தத்தால் அன்று பொதுக்குழுவில் பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.

இந்த விவாகரம்தான் இப்போது பெரும் பின்னடவை பழனிசாமிக்கு கொடுத்துள்ளது, சொந்த கட்சியை சேர்ந்த முதல் தலைவரை நீக்கி எடப்பாடி பதவிக்கு வர துடிக்கிறார் என்ற செய்திதான் பரவியது, இதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்த டெல்லி நேரடியாக நன்றாக தமிழ் தெரிந்த அண்டை மாநில தலைவர் மூலம் எச்சரிக்கை கொடுத்தது.

பன்னீர் செல்வம் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த நிலையில் அவரை நீக்குவதாக நீங்கள் முடிவு எடுத்து இருப்பது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும், உங்களால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கூட வெற்றி பெற வைக்க இயலவில்லை, பன்னீர் செல்வம் மட்டுமே தேனியில் வெற்றி பெற செய்தார், எங்களுக்கு யாரிடம் செல்வாக்கு இருக்கிறது யாரிடம் பணம் இருக்கிறது என அனைத்தும் தெரியும் இனியும் பொறுமையாக இருக்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்தது.

இந்த சூழலில் எச்சரிக்கை கொடுத்த தரப்பை சமாதான படுத்த டெல்லிக்கு நேரடியாக சென்றார் எடப்பாடி ஆனால் அங்கு அவரை சந்திக்க யாருமே தயாராக இல்லை இந்த சூழலில்தான் இனியும் அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது என ஆனது ஆகட்டும் நாமா அவர்களா என ஒரு கை பார்க்கலாம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தரப்பு ஆலோசனை கொடுக்க அதனை அவர் பின்பற்றி இப்போது ஏறத்தால இறுதி கட்டத்திற்கு வந்து விட்டார்.

ஏற்கனவே பொது குழு உறுப்பினர்களுக்கு பேசிய தொகை சென்றடயவில்லை என பலர் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்களாம், இந்த சூழலில் பல மாவட்ட செயலாளர்கள் இனியும் ஓபிஎஸ்சை எதிர்ப்பதால் நமக்கு என்ன லாபம் எனவும் யோசிக்க தொடங்கி இருப்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் எடப்பாடி.

இந்த சூழலில் தென் தமிழகத்தை முழுவதும் ஓபிஎஸ் நிர்வாகம் செய்து கொள்ளட்டும், கொங்கு மண்டலம் மற்றும் வடதமிழகத்தை எடப்பாடி பழனிசாமி நிர்வாகம் செய்துகொள்ளட்டும் சென்னையை இருவரும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது என ஆலோசனையை மூத்த நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து இருக்கிறார்களாம்.

ஏறதால சட்ட போராட்டம் நடத்தினாலும் ஒன்றும் நடக்காது பன்னீர் செல்வதை அரவணைத்து போவதே சிறந்தது என எடப்பாடி பழனிசாமியிடம் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார், இந்த தகவல் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரவ எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த தென் மாவட்ட நிர்வாகிகள் கிழியில் இருக்கிறார்களாம், மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட தவறான ஆலோசனையால் இப்போது நிம்மதி இன்றி  இருக்கிறாராம்.

நிதிஷ் குமார் போன்று பாஜகவை கட்டுக்குள் வைத்து அதிமுக தலைமை பொறுப்பை கைப்பற்றி விடலாம் என கணக்கு போட்ட எடப்பாடி பழனிசாமி இனி மொத்தமாக லல்லு பிரசாத் போன்று சிறையில் இருக்க வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது, கொடநாடு கொள்ளை வழக்கு, டெண்டர் முறைகேடு என அடுத்தடுத்து பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.