அரசியலில் அவ்வப்போது நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை திரைப்படங்களில் காட்சிகளில் வைப்பது வழக்கம், அதுபோல் முந்தய பழைய திரைப்பட காட்சிகள் சில அரசியல்வாதிகள் செயல்பாடுகள் மூலம் உண்மை என்பதை நிரூபித்து விடுகின்றன, அந்த வகையில் சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சரவணனை சுட்டிக்காட்டி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுகவில் சீட் கிடைக்காத சரவணன் பாஜகவில் இணைந்து மதுரையில் போட்டியிட்டார், தேர்தலில் தோல்வியை தழுவிய சரவணனுக்கு மாவட்ட தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது, இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவினரை தவறாக பேசியதாக கூறி கார் மீது செருப்பு வீசப்பட்டது.
இதையடுத்து அரங்கேறிய பல்வேறு சம்பவங்களுக்கு பிறகு அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார் சரவணன் அதன் பிறகு பாஜகவில் இருந்து விலக இருப்பதாக சரவணன் தெரிவித்த சூழலில் அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டார். இந்த சூழலில் சரவணன் மாறாத கட்சியில்லை என்பதால் அவருக்கு சர்வ கட்சி சரவணன் என பட்ட பெயர் சூட்டினர்.
மதிமுகவில் இருந்து பாஜக பிறகு பாஜகவில் இருந்து திமுக பிறகு திமுகவில் இருந்து பாஜக தற்போது பாஜகவில் இருந்து எந்த கட்சிக்கு செல்கிறார் என தெரியவில்லை இந்த சூழலில் பழைய சினிமா படத்தின் காட்சிகளை ஒப்பிட்டு சரவணனை கிண்டல் செய்து வருகின்றனர் அதில் அரசோயல்வாதிக்கு ABCD என பெயர் வைத்து இருப்பார்கள்.
ஏன் என்று கேட்டால் ADMK வில் இருந்து BJP பிஜேபியில் இருந்து CONGRESS, காங்கிரஸ் கட்சியில் இருந்து DMK என கட்சி மாறியதால் அதனை மறக்காமல் இருக்க ABCD என பெயர் வைத்து கொண்டதாக காட்சி அமைந்து இருக்கிறது, இந்த சூழலில் இதனை அப்படியே சரவணனை TAG செய்து பாஜகவினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.
சரவணனை கிண்டல் செய்து அரசியல் ரீதியாக பாஜகவினர் வீடியோ வெளியிடுவார்கள் என்று பார்த்தால் திரைப்படத்தின் காட்சிகளையே வெளியிட்டு விட்டார்கள் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது,