24 special

யோகி அமைச்சரவையில் ராஜினாமா செய்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி பரிசு.. தேவைதான் என "பாஜக" கருத்து.

Yogi bjp
Yogi bjp

உத்திரப் பிரதேசத்தில்  யோகி அமைச்சரவையில் காபினட் அந்தஸ்தில் அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மௌரியா என்பவர் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஜனவரியில் திடிரென ராஜினாமா செய்தார். இவரோடு நான்கு பாஜக உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு கட்சியை விட்டு வெளியேறியும் விட்டனர். மௌர்யா பிற்படுத்த வகுப்பினரின் அபரிதமான செல்வாக்கைப் பெற்றவர்.


கிட்டத்தட்ட நாலே முக்கால் வருடங்கள் பதவி சுகத்தை அனுபவித்தபின் வெளியில் வந்து முதல்வர் யோகிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ‘யோகிஜி அவர்கள் பிற்படுத்த மட்டும் , தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களை புறக்கணிப்பதாகவும், தன்னுடைய தாகூர் இனத்திற்கு மட்டும் சலுகை அளிக்கிறார் என்பதுதான் இவர் குற்றச் சாட்டுகள். இவர் கட்சியை விட்டு வெளியேறியதால் பாஜ கட்சியே சின்னாபின்னமாகி விடும் என்பது போன்ற பிம்பத்தை உண்டாக்கி ஊடகங்கள் ‘பில்ட்அப்’ கொடுத்து செய்திகள் வெளியிட்டன.

வடநாட்டு தொலைக்காட்சிகளின் தலைப்பு செய்தியே ‘ Massive setback for BJP’ என ஒரு ஊடகமும் வேறொன்று ‘big blow to UP BJP ‘ எனவும்  மற்றொன்று ‘ huge jolt for BJP என்றும் propaganda பரப்பி அவரவர்கள் பாஜக மீதும் யோகி ஆதித்யநாத்தின் மீதுள்ள வெறுப்பு உணர்ச்சிகளை கொட்டியும், விஷத்தை கக்கியும் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொண்டன. எதையும் பொருட்படுத்தாத முதல்வர் யோகியோ பொறுமையை கையாண்டு மாலையில்

‘ கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி தான் கவலைப்பட வில்லையெனவும் அதனுடைய பலாபலன்களை அவர்களே அனுபவிக்கட்டும்.’ என சுருக்கமாக செய்தி வெளியிட்டு முடித்து விட்டார்.

திரைமறைவில் அந்த மாஜி அமைச்சர் சமாஜ்வாதி கட்சியுடன் ரகசிய தொடர்பு கொண்டிருந்தார் எனவும் கட்சியை விட்டு வெளியில் வந்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்தால் தேர்தலில் போட்டியிட்டு வென்று புதிய அமைச்சரவையில் அவருக்கு துணை முதல் மந்திரி பதவி என அகிலேஷ் ஆசை காட்டி இழுத்தார் எனவும் தெரியவந்தது. வெளியேறி சிலநாட்களில் அகிலேஷ் யாதவை சந்தித்து லக்னோவில் கட்சியில் மௌரியா தன்னை இணைத்துக்கொண்டார் வடநாட்டு பத்தி்ரிகையாளர்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு பேட்டி காண வரிசையில் நின்றனர். பேட்டியின் போது அவர் பத்திரிகையாளர்களிடம், “ பொறுத்திருங்கள்…பாஜக  சவப்பெட்டியின் கடைசி ஆணி மார்ச் 10 ஆம் தேதி அறையப்படும்,” என சவால் விட்டார். 

சமாஜ்வாதி கட்சியில் சுவாமி பிரசாத் மௌரியாவுக்கு  OBC செல்வாக்க்கு அதிகம் உள்ள தொகுதியை ஒதுக்கி தேர்தரில் போட்டியிடுமாறு அகிலேஷ் கூறவும் , மௌரியாவும் அகிலேஷ் உட்பட மூத்த தலைவர்களை அழைத்து பிரச்சாரம் செய்யச் சொன்னார். ஆனால் இவரை எதிர் கொள்ள வலுவான வேட்பாளரான சுரேந்தர் சிங் என்பவரை யோகி பாஜக சார்பில் தேர்ந்தெடுத்து உ.பி யின் ஃபாசில்நகர் என்ற தொகுதியில் மௌரியாவை எதிர்த்து போட்டியிடும்படி கூறினார்கள். இருவர் சார்பாகவும் அந்தந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தனர்.

தேர்தல் நாளும் வந்தது .மக்களும் பெருவாரியாக வாக்களித்தனர். பின்னர் நேற்று வியாழனன்று ஓட்டு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவும் அறிவிக்கப் பட்டது. முடிவு என்ன தெரியுமா..? சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட சுவாமி பிரசாத் மௌரியா பாஜக வேட்பாள் சுரேந்திர சிங்கிடம் மண்ணை கவ்வினார்.  அன்று கும்பி எரிந்து நேர்மையான துறவியால் விடப்பட்ட சாபம் வீண் போகவில்லை. பாஜக வில் தொடர்ந்து இருந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று யோகியின் புதிய அமைச்சரவையில் துணை அமைச்சர் பதவி கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் மௌரியாவுக்கு  யோகியிடம் நல்ல செல்வாக்கு இருந்ததாம். யோகிக்கு இழைத்த துரோக்கத்திற்கு கை மேல் பலன் கிடைத்தது.