பேரணாம்பட்டு, மார்ச் 11 பேரணாம்பட்டு நகராட்சி கமிஷனராக பணி புரிந்து வருபவர் செய்யது சேன். இவர் நேற்று முன்தினம் இரவு தன் இருக்கைக்கு பின்புறம் கண்ணாடி பேழையில் அரபு மொழியிலான எழுத்துக்களை தமிழக அரசு சின்னம் பதித்து வைத்து இருந்தார்.கண்ணாடி பேழையுடன் நகராட்சி ஆணையாளர் செய்யது உசேன் இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் வேலூர் கலெக்டர், நகராட்சிகள் மண்டல இயக்குனர் ஆகியோருக்கு புகார்கள் தெரிவித்தனர். இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு வெளியிட்டது இதனையடுத்து மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு சின்னம் பதித்த அரபு மொழியிலான கண்ணாடி பேழையை அகற்றுமாறு பேரணாம்பட்டு நகராட்சி கமிஷனர் செய்யது உசேனுக்கு அறிவுரை வழங்கினர்.
இதனை ஏற்று செய்யதுஉசேன் நேற்றிரவு 8மணியளவில் அந்த கண்ணாடி பேழையை அகற்றினார். இது குறித்த தகவல் கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அலுவலகத்தில் தன்னிச்சையாக செயல்பட்ட அரசு அலுவலர் செய்யது உசேன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பும் வலியுறுத்தி வருகின்றனர், இதே போன்று இந்து சமூகத்தை சேர்ந்த ஒருவர் சமஸ்கிருத மொழியில் இவ்வாறு செய்து இருந்தால் தமிழக அரசு பார்த்து கொண்டு இருக்குமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக அரசு சின்னத்தை கீழே வைத்து அவமானம் செய்த செய்யது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க பட்டுள்ளதாம் அத்துடன் அரசு பணியாளர் விதிகளை மீறி மத ரீதியாக செயல்பட்ட செய்யதுவை இடை நீக்கம் செய்யவேண்டும் என பேராணம்பட்டு மக்கள் கொடுத்த புகாரில் விரைவில் ஆட்சியர் விசாரணை நடத்த இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
விசாரணை நடத்தி செய்யது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போது பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.