இஸ்ரேலிய மந்திரிசபை மறுபடியும் கவிழும் நிலைக்கு சென்றிருக்கின்றது, கிட்டதட்ட கவிழ்ந்துவிட்டது போல் தோன்றுகின்றது. யாருக்கும் மெஜாரிட்டி இன்றி இருந்த அந்த பாராளுமன்றத்தின் கூட்டணி குழப்பத்தில் முன்பு இந்திய தேவகவுடா சில எம்பிக்களை கொண்டு ஆட்சியினை பிடித்தது போல் பிடித்தார் இப்போதைய பிரதமர் நெப்தலி பெனார்ட்.
அவருக்கு சிக்கல் "பாஸ் ஓவர்" பண்டிகை வடிவில் வந்திருக்கின்றது "பாஸ் ஓவர்" என்பது யூதர்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுக்கு முன் எகிப்தில் இருந்து தப்பி வந்ததாக, மோசஸ் அவர்களை மீட்டு வந்ததாக கருதபடும் நிகழ்வின் பண்டிகை.
சுமார் 40 நாட்கள் கடும் விரதம் இருந்து இந்த பண்டிகையினை கொண்டாடுவார்கள், மொத்த யூதர்களும் கொண்டாடும் பண்டிகை ஜெருசலேம் அன்று கொண்டாட்டதில் மூழ்கும், இப்படி ஒரு "பாஸ் ஓவர்" பண்டிகையில்தான் இயேசு கொல்லபட்டார், யூதம் மேல் விரோதம் கொண்ட கிறிஸ்தவம் யூதரின் முக்கிய நாளை "புனித வெள்ளி" ஆக்கி ஒப்பாரி வைத்து அவர்களை வெறுப்பேற்றும்.
இன்றும் கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன், பெரிய வெள்ளியினை யூதர்தான் முடிவு செய்வார்கள், அவர்கள் நாள்குறிப்பார்கள் இவர்கள் காப்பியடிப்பார்கள், அப்படிபட்ட "பாஸ் ஓவர்" விரத நாட்களில் யூதருக்கு சில கட்டுப்பாடு உண்டு, புளிப்பில்லா பிரட் எனும் வறண்ட பிரட்டுகள்ளைத்தான் உண்ண வேண்டும், ஈஸ்ட் சேர்த்து புளிக்கவைக்கபட்ட பிரட் உண்ண கூடாது.
அந்த வறண்ட ரொட்டித்தான் இப்பொழுது இஸ்ரேலிய அரசை கவிழ்த்திருக்கின்றது, அதாவது இஸ்ரேலில் யூத கட்சி மட்டுமல்ல அரபு கட்சிகளும் சிறுபான்மையாக உண்டு, அவர்கள் ஆதரவில் இது இயங்கும் அரசு என்பதால் பெனர்ட் புளித்த பிரட் அதாவது ஈஸ்ட் சேர்க்கபட்ட பிரட்டுக்கு அனுமதி வழங்கினார்.
இஸ்ரேலிய ஆட்சியாளர்களுக்கு "மத நல்லிணக்கம்" "சமயசார்பற்ற நிலை" இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, உலகம் அப்படி "மத நல்லிணக்க"மாக இருந்திருந்தால் இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக காரணமே இல்லை என நம்புபவர்கள்.
இம்மாதிரி விஷயங்களில் விட்டுகொடுப்பை செய்யமாட்டார்கள், இதனால் ஒரு பெண் எம்பி ஆதரவினை விலக்கி கொள்ள இஸ்ரேல் அரசு பெரும்பான்மை இழந்தது, அங்குள்ள இரும்பு தலைவர் பெஞ்சமின் நேதன்யாகு புன்னகை பூக்கின்றார்.
(பதிவு - ஸ்டான்லி ராஜன்)
இந்த கட்டுரை/பதிவு தனி நபர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ததை TNNEWS24 குழு இணையதளம் மூலம் பொது பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவுகிறது, இந்த கட்டுரை TNNEWS24 குழுவால் உருவாக்கப்பட்டதல்ல . உங்களது சிறப்பு கட்டுரைகள் /பதிவுகளை எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.. EMAIL - [email protected]
(T& C APPLY)