Cinema

விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. பெயரை சொல்லியதும் அடித்த கொடுமை...!

Beast movie
Beast movie

தமிழ் திரைப்பட நடிகர்களில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய், இவரது நடிப்பில் தமிழ் புத்தாண்டு அன்று திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பீஸ்ட், நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ஸ்ர் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இப் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


அதே வேலையில் இப்படம் வெளியாவதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் உள்துறை செயலாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குவைத் நாட்டில் பீஸ்ட் திரைப்படம் வெளியாவது தடை செய்யப்பட்டுள்ளது, இப்படி படத்திற்கு ஒரு புறம் சிக்கல் உண்டாக, விஜய் ரசிகர்களுக்கும் தமிழக போலீசார் மூலமும் திரையரங்கு உரிமையாளர் மூலமும் புது சிக்கல் உருவாகி இருக்கிறது.

கடலூரில் விஜய் படத்தை வெளியிடும் நியூ சினிமாஸ் திரையரங்கம் விஜய் ரசிகர்களுக்கு என்று தனியாக ரசிகர் ஷோ எல்லாம் திரையிட முடியாது, முதல் காட்சியை டிக்கெட் முன்பதிவு செய்து பாருங்கள் என கறாராக சொல்லவிட்டதாம், இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் சாலையில் அமர்ந்து ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறை அவர்களிடம் சமாதானம் பேச முற்பட நிர்வாகிகள் ஏற்று கொள்ளவில்லை முரண்டு பிடித்தனர், இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்து சில நிர்வாகிகளை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த சூழலில் போலீசார் சற்று அமைதியாக பேசி வந்தனர் ஆனால் ஒரு சிலர் அமைச்சருக்கு போன் போடு, சென்னைக்கு போன் போடு என பேச  போலீசார் ரவுண்டு கட்ட ஆரம்பித்து விட்டனர்.

ஏன் சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கவில்லை என்ற கேள்வியை திரையரங்கு நிர்வாகிகளை நோக்கி எழுப்பிய நிலையில், திருநெல்வேலி ராம் சினிமாஸில் ட்ரைலர் காட்சி திரையிட பட்டதற்கு என்ன நடந்தது அதே போன்று ஏதாவது நடக்கும் என்ற காரணத்தினால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு காட்சி திரையிடவில்லை என்கின்றனர் நிர்வாகத்தினர்.