புரட்டா வாங்க கடைக்கு சென்றவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து புலம்ப வைத்து இருக்கிறார்கள் திமுகவினர் என ஊடகங்கள் முன்பு புலம்பி இருக்கிறார் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர், திமுகவினர் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தியதும் அவர் சொன்ன தகவலும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
சேலம் முகமது புறா பகுதியில் செஷிப் உணவகம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஷாஜகான் என்பவர் நேற்று உணவகத்திற்கு சென்று பத்து பரோட்டா வாங்கி உள்ளார் அப்போது கூடுதலாக சால்னா கேட்டதற்கு கடையின் உரிமையாளர் முகமது அலி உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து ஷாஜகானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென பரோட்டா எ கரண்டியால் ஷாஜகானின் முகத்தில் குத்தியுள்ளனர் இதில் முன் பகுதியில் இருந்த இரண்டு பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது இதனை அடுத்து ஷாஜகானை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர், காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் திமுக முன்னாள் கவுன்சிலர் கபீர் ஆதரவால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தி வருகின்றனர் இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் தொடர்ந்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தினர் காவல்துறையின் பேச்சு வார்த்தைக்கு உடன்படாத உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பில் ஈடுபட்டுள்ளனர்
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது பரோட்டாவிற்கு கூடுதலாக குருமா கேட்ட குற்றத்திற்காக முகமது பாருக், சுல்தான், உள்ளிட்டோர் ஷாஜகானை தாக்கியுள்ளனர் நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை கேட்டதற்கு திமுகவின் தலையீடு இருப்பதால் அவர்கள் மெத்தனம் காட்டுவதாகவும் இதுவரை எந்தவித நடவடிக்கும் எடுக்கப்படாததால் தற்போது ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாக்குதல் நடத்திய வரை கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷாஜகானின் உறவினர்கள் முதல்வரே காவல்துறையை நேர்மையாக செயல்பட விடுங்கள்... உங்கள் கட்சியினரை அடக்குங்கள் சட்டத்தை பின்பற்றுங்கள் என உரத்த குரலில் பேசினர்.