24 special

என்ன கனிமொழி மேடம்... ஆளுநர் சொன்னது சரியா?

Rnravi,kanimozhi
Rnravi,kanimozhi

தமிழக ஆளுநர் ரவி நேற்றைய தினம் பேசிய பேச்சுக்கள் திமுகவை அதிர செய்துள்ளது, குறிப்பாக கனிமொழி மற்றும் உதயநிதி இருவரும் கடுமையாக ஆளுநரை விமர்சனம் செய்தனர், இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் ராய் தெரிவித்த கருத்துக்கள் ஆளுநரின் பேச்சின் பின்னணி குறித்து அதிர செய்துள்ளது.


ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அதற்கு பண உதவி செய்ததாக வெளிநாட்டில் இருந்து பணம் பெரும் அமைப்பான THE OTHER MEDIA என்ற N.G.O மீது தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த போது 3 கோடிக்கும் அதிகமான நன்கொடையை வெளிநாட்டில் இருந்து THE OTHER MEDIA பெற்றதும் அதில் 75% தொகை செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதே போல் இங்கிலாந்தை சேர்ந்த OXFAM என்ற வெளிநாட்டில் இருந்து நிதி பெரும் அமைப்பு மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போட்டு இருக்கும் தகவலும் வெளியாகி இருக்கிறது, திமுகவை சேர்ந்த கனிமொழி தமிழக ஆளுநர் ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சதியா என்பது குறித்த ஆதாரம் தர வேண்டும் எனவும் மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் ஆளுநரை கண்டிப்பதாக கனிமொழி தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் தனது கருத்தை தூத்துக்குடியில் சென்று சொல்ல முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார் இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் the other media மீது ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உள்துறை இணை அமைச்சர் தெரிவித்து இருப்பது ஆளுநர் பேச்சின் பின்னால் இருக்கும் உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறது.

விரைவில் விசாரணை வளையத்தில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திய உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் முதல் போராட்டத்தால் பயன்பெற்ற அரசியல் புள்ளிகள் வரை பலரது உண்மை முகம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளிவரும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.ஸ்டெர்லைட் மூடப்பட்ட சம்பவத்தில் வெளிநாட்டு சதி செயல் இருப்பதற்கான ஆதாரங்கள் வலுவாக கிடைக்கும் பட்சத்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்த, செயல்படுத்திய பல அரசியல் வாதிகள் பதவி இழக்கும் சூழலும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் ஒரு தொழில் நிறுவனத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடந்த வரலாறு இல்லை அதிலும் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு பாதிப்பு இல்லை என அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்த பின்பும் ஏன் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது என்ற கேள்வியை பலர் தூத்துக்குடி போராட்டத்தின் போதே எழுப்பினர்.

இவை அனைத்திற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது, ஆளுநர் கூறியது போல் வெளிநாட்டு சதி என்பது மட்டும் உறுதி செய்யபட்டால் பலரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி ஆவதுடன் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஆளுநர் நிரூபிக்க வேண்டும் என கனிமொழி கூறிய நிலையில் உள்துறை அமைச்சகம் the other media என்ற அமைப்பை விசாரணை செய்வதன் மூலம் விரைவில் முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் அப்போது கனிமொழிக்கு தவையான முழுமையான பதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.