பாஜக மேற்கொண்டுள்ள யாத்திரை கொடுத்து முதகவரின் கவனத்திற்கு நேரடியாக மாநில உளவுத்துறை தொடங்கி முன்னாள் IPS அதிகாரி என சிறப்பு குழு தொடர்ச்சியாக பல்வேறு அறிக்கைகளை கொடுத்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் போலீஸ் துறையை சேர்ந்த பலர் அண்ணாமலைக்கு ஆதரவாக செல்ல இருக்கிறார்கள் என்ற ஒரு தகவல் முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல அது குறித்து தான் தற்போது ஆளும் கட்சி விவாதித்து வருகிறதாம்.
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தது பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் அது குறித்து உளவுத்துறை பல்வேறு தகவல்களை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறதாம்.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் கார்த்திக் (37). நேற்று திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நாடு 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் இந்த சமூகமும் நாடும் வளர்ச்சி அடைய வேண்டும். இது குறித்து சமூக ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். அந்த அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்க உள்ளேன். அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்.
அந்தக் கட்சியில் எஸ்.பி உள்ளார். அவருக்கு உதவ போலீஸ் தேவை. எனவே தான் எனது வேலையை ராஜினாமா செய்கிறேன். இதனால் எனது குடும்பத்தினர் இப்போது வருத்தத்தில் உள்ளனர். ஆனால், கட்சியில் நான் உயர்ந்த நிலைக்கு செல்லும் போது அவர்கள் சந்தோஷப்படுவார்கள்
காவலர் பணியால் மன அழுத்தம் இல்லை. 13 வருடங்கள் காவல்துறையை நேசித்து பணியாற்றினேன். இனி மக்கள் சேவைக்காக எனது பணியை ஒத்திவைத்துள்ளேன். இன்று பாஜக மட்டுமே சமுதாயத்தில் நல்ல கட்சியாக உள்ளது. எனவே, அக்கட்சியில் இணைய உள்ளேன்.
எனது ஆய்வில் திமுக அரசின் செயல் குறித்து தெரிய வரும். இந்த அரசே வேண்டாம் எனவும், மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வேண்டும் எனவும் மக்கள் கூற வாய்ப்புள்ளது. இன்று எனது பணியை ராஜினாமா செய்ய உள்ளேன். நான் முன்வைத்த காலை பின் வைக்கமாட்டேன்’’ என்றார்.
நல்ல பொறுப்பில் இருக்கும் ஒரு காவலரே பணியில் பல ஆண்டுகள் சர்விஸ் இருக்கும் நிலையில் தனது பணியை உதறிவிட்டு பணியில் சேர போவதாக சொல்லி இருப்பது பல ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது.
இது எப்படி நடந்தது என பலர் பேசிக்கொண்டு இருக்க அண்ணாமலை யாத்திரையின் தொடர்ச்சியாக பல்வேறு காவலர்கள் முன்னாள் உயர் பொறுப்பில் சமூக அந்தஸ்தில் இருந்த காவலர்கள் குறிப்பாக கிராமங்களை மையமாக கொண்ட அரசு அதிகாரிகள் பலர் அண்ணாமலைக்கு ஆதரவான மன நிலைக்கு வந்து இருப்பதாகவும் இது அரசியலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் பெரும் அளவில் அண்ணாமலைக்கு ஆதரவாக திரும்புவார்கள் என மாநில உளவு பிரிவு கண்டறிந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் உண்டாகும் என்பது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது அண்ணாமலையின் முதற்கட்ட நடை பயணத்தில் இத்தனை மாற்றம் என்றால் இன்னும் என்னென்ன மாற்றங்கள் அரங்கேர போகிறதோ என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.