தமிழக ஆளுநரை பேரவையில் இருந்து வெளியேற்றினோம் பார்த்தாய என திமுகவினர் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பெரும் சட்ட சிக்கலில் திமுக சிக்கி இருப்பது தெளிவாக தெரிய தொடங்கி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் சூழலில் அது குறித்து விளக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன், இது குறித்து அவர் தெரிவித்ததாவது, மிகத்தெளிவாக ஆளுநர் உரை பற்றிய சட்டதிட்டங்களை பற்றி பேரவை சட்டம் விளக்குகிறது..Article 175 / 176 என அரசியல் சாசனம் தரும் உரிமையின்படி ஆளுநர் பேரவையில் உரையாற்றுகிறார்.அவர் உரையின் போது எந்த குறுக்கீடும் இல்லாமல் இருக்க வேண்டியது பேரவை மாண்பு.அப்படிச் செய்வது பேரவை விதிப்படி குற்றம்.இதை சபாநாயகர் அனுமதித்தது மாபெரும் தவறு.
அடுத்தது,இந்த அரசு தன்னை புகழ்ந்துகொள்ளும் வசனங்களை ஆளுநர் வாசிக்கவில்லை என்கிற நிலையில் அதில் தேவையான திருத்தத்தை முன்மொழிய வேண்டியது எப்போதென்றால்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடக்கும் உரையின் போதே..
ஆனால்,ஆளுநரை பேரவையில் வைத்துக் கொண்டே அவருக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.உண்மையில் ஆளுநரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு மாபெரும் அவமானத்தையும், சட்டசிக்கலையும் ஏற்படுத்தி அவர் வெளியேறியுள்ளார்..
சிசுபாலனின் தவறுகள் என்றும் வரவேற்கத்தக்கவையே..என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன், தமிழக சட்ட சபையில் ஆளுநரை வைத்து கொண்டே முதல்வர் நடந்துகொண்டவிதமும், வேடிக்கை பார்த்த சபாநாயகர் செயலும் பெரும் சட்ட சிக்கலை ஆளும் கட்சிக்கு கொண்டுவந்து இருப்பதாக பலரும் கூறும் நிலையில் மேலும் ஒரு சிக்கலும் திமுகவிற்கு உண்டாக்கி இருக்கிறதாம்.
சபையில் ஆளுநரை முன்னே விட்டு அவரது முதுகிற்கு பின்னால் போயா என கத்தி கொண்டு கையை ஆட்டிய அமைச்சர் பொன்முடியின் செயல் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கும் சூழலில் இது குறித்து மத்திய உளவு அமைப்புகளும் உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுத்துள்ளன.
அதன் வெளிப்பாடு வருகின்ற நாட்களில் தெரியும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சத்திற்கு உளவு அமைப்பு கொடுத்த தகவல் குறித்து அடுத்த வீடியோவில் முழுமையாக குறிப்பிட இருக்கிறோம் மறக்காமல் நமது TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தில் பின்பற்றி கொள்ளவும்.