தொடர்ச்சியாக ரெய்டு நடவடிக்கையில் திமுக சிக்கித்தவிக்கும் நிலையில் அடுத்த ரெய்டு பட்டியலில் திமுகவின் முக்கிய தலைவர் பெயர் அடுத்த இடத்தில் உள்ளத்தால் ஒட்டுமொத்த கழகமும் உறைந்துபோய் உள்ளது.
கடந்த மாதம் ஐடி அதிகாரிகளின் ரெய்டிற்கு உட்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் சம்பந்தப்பட்ட இடங்கள், தற்போது அமலாக்க துறையின் வசம் மாறி அந்த ரெய்டின் மூலம் பல ஆவணங்கள் மற்றும் பணபரிமாற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினர் விசாரணைக்காக அவரை கைது செய்தனர்.
ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தற்போது இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மாநில மருத்துவ குழு மட்டுமின்றி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ குழுவும் பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மனுக்கள் நீதிமன்றங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அந்த விசாரணையின் பொழுது அமலாக்கத்துறை தனது தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த முறை தங்கள் கைவிட்டு சென்று விடவே கூடாது என்பதற்கான திமுக அரசே ஆடி போகும் அளவிற்கு 8 அதிரடி வாதங்களை முன்வைத்து வாதிட்டது. இந்தநிலையில் தற்போது காவலில் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகிறார்.
சட்ட வழக்குகளை சந்தித்துக் கொண்டு தற்போது அமைச்சர் பதவியில் இருக்கிறோமா இல்லையா என்பது கூட தெரியாமல், இன்னும் இரண்டு தினங்களில் காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி படுத்துக் கொண்டிருக்கின்ற வேளையில், தற்போது அமலாக்க துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை யார் மீது பாயும் என்ற அதிர்ச்சி கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் பதியப்பட்ட புகாரின் அடிப்படையில் லைக்கா நிறுவனம் மற்றும் கல்லல் குழுமத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் மீது அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் லைக்கா நிறுவனம் ரூபாய் 300 கோடி அளவிற்கு சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டறிந்த அமலாக்கத் துறையினர் சோதனைகளை மேற்கொண்டு உதயநிதியின் அறக்கட்டளை வங்கி கணக்கில் ரூபாய் 34.7 லட்சத்தை முடக்கியது. புகாரில் கூடப்பட்டிருந்த நிறுவனங்களிடமிருந்து மேலும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி பணம் வந்துள்ளதையும் அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் இன்று வரையிலும் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமலாக்க துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை இருக்கும் சூழலில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினில் அறக்கட்டளையில் இரண்டு நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் மற்றொருவர் கிருத்திகா உதயநிதி. இந்த அறக்கட்டளை சென்னை முகவரியில் எங்கு உள்ளதோ அதே முகவரியில் தான் நோபல் குழுமமும் உள்ளது.
ஒரே டோர் நம்பர், ஒரே வீதியில் உதயநிதி பவுண்டேஷன் எங்கோ அங்கே தான் நோபல் குழுமத்தின் நோபல் பிரிக்ஸ்சும்! அதாவது இதிலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால் கடந்த முறை முதல்வர் வெளிநாட்டு பயணமாக துபாய்க்கு சென்று ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்தாரே அந்த நோபல் நிறுவனம் தான் இந்த நோபல் நிறுவனம், இவர்கள் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று அங்கிருந்து ஒப்பந்தமாக நமக்கு வந்தால் தான் அது வெள்ளை பணமாக மாறும் அதற்கு தான் உதயநிதி பவுண்டேஷன் இயங்குகிறது இப்படி இருக்கும் சமயத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட வரவில்லை என்றால் எப்படி வரும்? என பகிரங்க தகவலை முன் வைத்தார்.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பிடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போதே திமுகவின் பாதி அமைச்சரவை மருத்துவமனையில் தான் தங்களது நேரங்களை கழித்து வருகின்றனர் இந்த நிலையில் அமலாக்க துறையின் அடுத்த பார்வை உதயநிதி ஸ்டாலின் மீது எந்த நேரத்திலும் விழலாம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் குடும்பம் பயத்தில் திணறி வருகின்றனர்.