அமலாக்கத்துறை மேற்கொண்ட ரெய்டு மற்றும் கடந்த ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எழுப்பப்பட்ட புகாரில் எடுத்த நடவடிக்கையினால் இரண்டு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானார் ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதிற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் ஒவ்வொருவரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நேற்றைய தினம் நடத்தி முடித்தனர்.
அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து தனது அறிக்கையை வெளியிட்டார், அதில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜி கைது செய்தது சட்டபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறினாலும் அது திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை தான்! பாஜக தனது அரசியலாகவே இதனை செய்து வருகிறது தம்மை பகைத்துக் கொள்ளும் எதிர்க்கட்சியினர்களை பயமுறுத்துவதற்காகவே அவர்கள் இந்த அரசியல் உத்தியை கையாளுகின்றனர், இவர்களில் இந்த செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வன்மையாக கண்டிக்கிறது செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்திருப்பதற்குப் பின்னணியில் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக வைக்கப்பட்ட செக்மேட்டே! என்று தெரிவித்திருந்தார்.
இப்படி திருமாவளவன் திமுகவின் கூட்டணி கட்சி என்ற பெயரில் திமுகவிற்கு பறைசாற்றி ஒரு பக்கம் பொங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில், மறுபக்கம் பொது சிவில் சட்டம் என்று பெரிய அதிர்ச்சி ஒன்று திருமாவளவன் தலையில் இடியாக இறங்கியுள்ளது. இந்த பொது சிவில் சட்டம் பற்றி சமீபத்தில் அதிக அளவிலான கருத்துகள் நிலவி வருகிறது, பொது சிவில் சட்டம் என்றால் ஒரு நாட்டின் அனைத்து சமயம் மொழி இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப் பகுதியில் வாழும் மக்கள் அனைவருமே பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களை குறிக்கும். அதாவது ஒரே நாடு ஒரே சட்டம்.
கிரிமினல் சட்டத்துப்படி ஏதேனும் ஒரு இந்தியர் குற்றம் புரிஞ்சிருந்தால் அவர்களுக்கு ஒரே மாதிரியான தீர்ப்புகள் வழங்கப்படுகிறது அதே போன்று ஒவ்வொரு மதத்திலும் திருமணம் செய்யும் விதம், வாரிசுரிமை, தத்தெடுப்பு முறை, விவாகரத்து பெருதல், மறுமணம் செய்தல் என்பது வேறுபட்டு இருக்கும் அதை அனைத்தையும் ஒரே சட்டத்திற்குள் கொண்டு வந்து எல்லா மதத்தினருக்கும் ஒரே விதமான முறைகளை ஏற்படுத்துவதை பொது சிவில் சட்டத்தின் முக்கிய நோக்கமாக சொல்லப்படுகிறது. இந்த சட்டம் சுதந்திர காலத்தில் அரசியல் அமைப்பு சட்டங்களை வரையறை செய்யும் பொழுதே இயற்றப்பட்டது தான் ஆனால் வழிகாட்டு நெறிமுறைகளிலே இது குறிப்பிடப்பட்டுள்ளது. இடதுசாரிகள் எதிர்ப்பின் காரணமாகவே தற்போது வரை இந்த சட்டம் அமல்படுத்தபடாமல் உள்ளது.
இந்த பொது சிவில் சட்டத்தை பாஜக தற்போது அமல்படுத்த வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது ஏனென்றால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பது அவர்களின் முக்கிய கொள்கையாக உள்ளது. ஆனால் இதனை விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக எதிர்த்து வருகிறார், இந்த சட்டம் பற்றி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொது சிவில் சட்டம் என்றால் அலறும் திருமாவளவன் தரப்பை இது மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ஒரு பக்கம் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது பற்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் அடுத்த பக்கம் பொது சிவில் சட்டம் வருவது இடதுசாரிகளை அலற வைத்துள்ளது.