ஒட்டு மொத்த ஆளும் கட்சியும் செந்தில் பாலாஜிக்கு எப்படியாவது ஜாமின் கிடைக்க வேண்டும் என அடுத்தடுத்து பெரும் முயற்சி மேற்கொண்ட நிலையில் அமலாக்கதுறை சிறப்பு சட்டங்களின் படி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கதுறை வழக்கறிஞர் சட்ட பிரிவுகளை முன்வைத்த காரணத்தால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யபட்டது.
செந்தில் பாலாஜியை அமலாக்க துறை 8 நாட்கள் கஷ்டடியில் எடுத்து விசாரணை செய்ய பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பார்த்த அமலாக்க துறை அதிகாரிகள் சோர்வு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறதுவிசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும் என்பதால் அதனை எப்படி எதிர் கொள்வது என யோசித்த அமலாக்கதுறை அடுத்த முடிவு எடுத்து இருக்கிறதாம்.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கையை காரணமாக காட்டி தான் தற்போது விசாரணையில் இருந்து தப்பித்து வருகிறார், இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு உண்மையில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவ குழுவை அமலாக்கதுறை அழைத்து வந்து இன்று இரவிற்குள் சோதனை நடத்த முடிவு செய்து இருக்கிறதாம்.
அதே வேலையில் செந்தில் பாலாஜியின் நிழலாக இருந்த அவரது தம்பி அசோக் மற்றும் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்த அமலாக்க துறை முடிவு செய்து அதற்கான அனைத்து பணியையும் தீவிரமாக எடுத்து வருகிறதாம், செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கிற்கு முறைப்படி அமலாக்கதுறை சம்மன் அனுப்பியும் இதுவரை அசோக் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் அவரை கைது செய்வதில் எந்த சட்ட சிக்களும் இல்லை என்ற முடிவிற்கு அமலாக்கதுறை வந்து இருக்கிறதாம்.
இன்று அல்லது நாளைக்குள் அசோக் விசாரணைக்கு ஆஜராகத பட்சத்தில் அசோக்கிற்கு எதிராக கைது வாராண்ட் பிறப்பிக்கவும் அவரை மடக்கி பிடிக்கவும் தனி குழு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியாத பட்சத்தில் முதலில் அவரது தம்பியிடம் இருந்து விசாரணையை தொடங்க அமலாக்க துறை முடிவு செய்து இருக்கிறதாம்.
செந்தில் பாலாஜியின் நிழலாக இருந்த அசோகிடம் தகவல்களை பெற்றாலே பல உண்மைகள் வெளிவரும் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு அடுத்த விசாரணையை வைத்து கொள்ளலாம் என அமலாக்க துறை வட்டாரங்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ அடுத்த மாதம் இறுதிக்குள் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை இழப்பது உறுதியாகி இருப்பதாகவும் இனி அரசியலில் செந்தில் பாலாஜியின் பங்கு என்ன என்பது அமலாக்க துறை நீதிமன்றத்தில் பதிவு செய்யும் குற்ற பத்திரிகையில் இடம்பெறவுள்ள அம்சங்களை வைத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.