லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்புகள் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் வெளியாகி பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்கள் நியமன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, பெரும்பாலான கட்சிகள் தற்போது தங்கள் கூட்டணியை அறிவித்துவிட்டு கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி என்பதையும் அறிவித்து விட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பொறுப்பை ஏற்றி இருக்கும் திமுகவிற்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கைது செய்யப்பட்டவர்களின் தலைவனாக அதாவது போதை பொருள்கள் கடத்தல் கும்பலின் தலைவனாக திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் டெல்லி போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிய வர அவரை விசாரணைக்கு அழைத்த பொழுது தலைமறைவாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கைது செய்து தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தான் போதை கடத்தல் மூலம் பெற்ற வருமானத்தை சினிமா மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் செலவழித்திருப்பதாக கூறியுள்ளதாகவும் அவருக்கும் சில அரசியல் பிரமுகர்களுக்கும் முக்கிய தொடர்பை இருப்பதாக அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தது திமுகவின் தலையில் இடியை இறக்கியது ஏனென்றால் அவர் திமுக நிர்வாகியாக இருந்து முதல்வர் மற்றும் முதல்வரின் மகன் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தவர் அதிலும் குறிப்பாக இத்தனை ஆண்டுகளாக தலைமறைவாகவும் இப்படி ஒருவர் இருக்கிறாரா என்பது கூட வெளியில் தெரியாமல் இருந்து வந்த நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருந்தார் அதற்கேற்ற வகையில் தமிழகத்தில் முன்பில்லாத வகையிலான போதை பொருட்கள் கடத்தலும் கஞ்சா புழக்கமும் அதிகரித்திருந்தது இதனை பல பெற்றோர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் நடை பயணத்தின் பொழுது தெரிவித்திருந்தனர்.
பள்ளி செல்லும் குழந்தைகளின் பைகளில் போதைப்பொருட்கள் வைக்கப்பட்டு கடத்தப்படுவதாகவும் அவற்றை பள்ளி முதல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கி அடிமை ஆக்கி வருவதாகவும் அரசியல் விமர்சனங்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் முக்கிய பங்கு திமுகவிற்கு தான் உள்ளது ஆனால் இந்த போதை விவகாரத்தில் தனது அண்ணன் பய்யனையே பறிகொடுத்துள்ளார்கள் அப்படி இருந்தும் அவர்களுக்கு புத்தியே வரவில்லை என்று பரபரப்பான தகவலை கூறினார். அதாவது போதைப் பொருளை பயன்படுத்திய அழகிரி மகன் துறை தயாநிதிக்கு நினைவு இழந்து இருப்பதையும் காப்பாற்றக்கூடிய நேரத்தில் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் தற்போது வரை அவரைக் காப்பாற்ற முடியாமலும் மருத்துவமனையில் அனுமதித்து வைத்திருக்கிறார்கள். இதற்காகத்தான் முதல்வரும் முதல்வரின் மனைவி பிள்ளைகள் என முதல்வர் குடும்பமே அடிக்கடி அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வருகிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் துரை தயாநிதி உடல் நல பாதிப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் தற்போது அவரை வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதாவது அழகிரியின் மகன் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவருக்கு சிகிச்சை மேற்கொண்டதில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுவதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் தற்போது மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் துறை தயாநிதி பற்றி கூறியது உண்மை என்ற வகையிலும் இத்துடன் திமுக தனது இந்த போதை கடத்தலை விடுமா என்ற பேச்சுக்களும் தற்போது அரசியல்வட்டாரத்தில் உலா வருகிறது.