24 special

எனக்கும் ஜாஃபருக்கும் சம்பந்தமில்லை அதிரடி வீடியோ வெளியிட்ட டத்தோ மாலிக்!

JAFFER SADIQ, DATHO MALIK
JAFFER SADIQ, DATHO MALIK

கடந்த மூன்று ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3500 கிலோ போதை பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடத்திய விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியும் தமிழக சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது,. அதில் ஜாபர் சாதிக்கிடம் கோடிக்கணக்கில் சில அரசியல்வாதிகள் பணம் வாங்கியுள்ளதாகவும் அவர்கள் யார் யார் எவ்வளவு பணம் பெற்றுள்ளார்கள் என்பது குறித்த விசாரணையை அமலாக்கத்துறை நடத்தி பெறுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் என் ஐ ஏ போலீசும் இறங்கி தனது சந்தேகத்தை கூறியுள்ளது அதாவது கோவை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட பயங்கரவாத கும்பலுக்கு அரபுக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டதும் இப்படி பயிற்சி அளிக்கப்படுபவர்களுக்கு வேண்டிய நிதி உதவியை ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் சென்றுள்ளது என்பதை விசாரணையின் மூலம் கண்டறியும் படி தெரிவித்துள்ளது, இதன்படியே இதுவும் தற்போது உற்ஜீதமாகியுள்ளதாக என் ஐ ஏ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இப்படி தமிழகத்தை சேர்ந்த ஒருவர் போதை கடத்தல் கும்பலில் தலைவனாக இருந்தது மட்டுமின்றி பயங்கரவாத கும்பலுக்கும் நிதி உதவி அளித்து வந்துள்ளார் இன்னும் இந்த விவகாரம் எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சொல்லப்போகிறது யார் யாரெல்லாம் தொடர்பு இருக்கப் போகிறார்கள் யாரெல்லாம் சிக்க போகிறார்கள் என்பதை நினைத்து பார்த்தாலே தலை சுற்றி விடும் அந்த அளவிற்கான திடிக்கிடும் திருப்பங்களை இந்த விவகாரம் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக இருப்பவருக்கே ஒரு பாஸ் மலேசியாவில் உள்ளார் என்றும் அவரது பெயர் டத்தோ மாலிக் மலேசியாவில் குடியுரிமை பெற்றவர் என்று தகவலும் சமூக வலைதளங்களில் உலா வந்தது. இதனை சில பத்திரிகையாளர்களும் தெரிவித்ததாக சில செய்தி தாள்களில் வெளியிடப்பட்டது, அதனால் இந்த தகவலுக்கு மலேசிய போலீஸ் பதில் அளித்துள்ளது அதாவது இதுவரை எங்களுக்கு இதுபோன்ற தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் இது குறித்த தகவல்கள் அல்லது ஏதேனும் ஆதாரங்கள் விவரங்கள் கிடைத்தால் அது குறித்து விசாரிப்போம் என்றும் பதிலளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தனக்கும் ஜாபர் சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டத்தோமாலிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தற்போது போதி கடத்தல் கும்பல் தலைவராக கருதப்படுகின்ற ஜாபர் சாதிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்னை அவரின் பாஸ் என்கிறார்கள் மாபியா என்று கூறுகிறார்கள்! அனைத்துமே பொய் எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை! அவரை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை எந்த தொழிலும் அவருடன் நான் ஈடுபட்டதில்லை, என்னுடைய நற்பெயரை கெடுப்பதற்காக மலேசியாவில் உள்ள சில எதிர் தரப்பு வாதிகள் இந்திய போலீசுக்கு இதுபோன்ற தகவல்களை வெளியிடுகிறார்கள். நான்  பிலிம் இண்டஸ்ட்ரியில் தொழிலதிபர், தேவையில்லாமல் என்னை மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் அவர்களையும் இதில் இழுக்கிறார்கள் நான் இது குறித்த தகவலை சட்டபூர்வமாக புகாராக அளித்துள்ளேன், இந்தியன் எம்பஸிற்கும் சென்று கூறியுள்ளேன் என்று ஒரு வீடியோவில் பேசி அதனை வெளியிட்டுள்ளார். 

இது தற்போது இணையங்களில் வைரனாகி வருகிறது ஆனால் இதற்குப் பின்னர் என்ன விவகாரம் என்று விசாரிக்கும் பொழுது தமிழகத்தில் கடத்தல் கும்பல் தலைவன் கைதாகி விட்டான் இதற்குப் பிறகு அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் தான் பிடிபடுவார்கள் அப்படி பிடிபட்டால் தமிழகத்தின் ஆட்சியில் உள்ள பெரும் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்பதால் தற்போது அந்த கவனத்தை மலேசியா பக்கம் திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது இருப்பினும் இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கலாம் எது தவறாக இருக்கலாம் யார் செய்திருப்பார் யார் கூட்டு வைத்திருப்பார் என்ற பல யூகங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.