24 special

சிக்கியது கத்தி!! விரைவில் பிடிபடுவாரா குற்றவாளி?

RAMAJEYAM
RAMAJEYAM

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார், தொடர்ந்து இரண்டு நாட்களாக தனது தந்தை வீட்டிற்கு வராத காரணத்தினால் ஜெயக்குமார் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து ஜெயக்குமாரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்ட பொழுது அவரது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் கடந்த நான்காம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரம் முழுவதையும் பரபரப்பில் ஆழ்த்தியது மேலும் இதற்கு யார் காரணம் என்று கேள்வியும் பல தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. போலீசார் உடலை மீட்டதும் இது கொலையா அல்லது தற்கொலையா என்று கோணத்தில் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட ஜெயக்குமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.  பிறகு அவரது உடல் ஐந்தாம் தேதி குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


இதனை அடுத்து ஜெயக்குமாரின் இறப்பு குறித்த விசாரணை காவல்துறையினர் பரபரப்பாக மேற்கொண்ட நிலையில் இறந்த ஜெயக்குமார் தனது மருமகனுக்கு இரண்டு கடிதம் எழுதியத விவகாரம் வெளியே வந்தது. அந்த கடிதத்தில் ஜெயக்குமார் கூறிய பல தகவல்கள் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியதால் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு கூடுதலாக ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இவ்வழக்கு தொடர்பாகவே 9 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.. மேலும் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் தனபாலு மற்றும் எம்எல்ஏ ரூபி மனோகர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றதால்  அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையில் கிடைத்த விபரங்களை வைத்தும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதையும் போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்ற செய்தியும் வெளியானது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில் ஜெயக்குமாரின் செல்போன் குறித்த ஒரு லீட் கிடைத்ததால் அவரது செல்போன் குறித்த தேடலை போலீசார் மேற்கொண்ட பொழுது, மேலும் அவரது செல்ஃபோன் கடந்த இரண்டாம் தேதி உபரி அருகே உள்ள குட்டம் பகுதியில் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர், இதனை உறுதிப்படுத்துவதற்கு அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். அதோடு அந்த கிணற்றுப் பகுதியை சுற்றி ஜெயக்குமாரின் செல்போன் கிடைக்குமா என்பது குறித்த சோதனையில் போலீசார் ஈடுபட்ட பொழுது ஜெயக்குமாரின் வீட்டிற்கு அருகிலேயே இரண்டு லிட்டர் பெட்ரோல் பாட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த பெட்ரோல் பாட்டிலில் உள்ள கைரேகையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர், மேலும் அப்பகுதி சுற்றி உள்ள பெட்ரோல் பங்கில் யாரேனும் சந்தேகம் படும்படி பாட்டிலில் பெட்ரோலை வாங்கிச் சென்றார்களா என்பது குறித்து விசாரணையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் ஜெயக்குமாரின் தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றுவதற்கான பணிகள் முடிந்த பிறகு ஒரு சிறிய துருப்பிடித்த கத்தி அந்த கிணற்றில் கிடைத்துள்ளது. ஜெயக்குமாரின் இறப்பு செய்தி வெளியானதிலிருந்து கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்த விசாரணையை கடந்த ஏழு நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்டு வருகிற நிலையில் யாரும் எதிர்பார்த்திடாத அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் ஜெயக்குமாரின் தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து அதாவது அவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தை அருகிலேயே உள்ள கிணற்றிலிருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது வேறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் திருச்சியில் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் எப்படி கொலை செய்யப்பட்டாரா அது போலவே ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டது எனவும் வேறு தகவல்கள் கசிகின்றன...