தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் பள்ளி பருவத்தில் இருப்பவர்கள் மதுப்பழக்கத்திற்கும் சில தவறான பழக்கத்திற்கும் அடிமையாகி வருவதை வெளியாகின்ற செய்திகள் மூலம் பார்க்க முடிகிறது. முன்னதாக தமிழகத்தில் உலக அளவில் போதைப்பொருட்களை கடத்தி வந்த மன்னன் என்று அழைக்கப்படுகின்ற பெரும் குற்றவாளி கைது செய்யப்பட்டார் இது தமிழக முழுவதும் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் பெற்றோர்கள் சாதாரணமாக குழந்தைகள் வெளியே சென்று வந்தால் கூட எங்கே சென்றார்கள் என்ன பழக்கம் வைத்துள்ளார்கள் அவர்களுடன் பழகும் நண்பர்கள் யார் யார் என்பது குறித்த வேதனைகளும் கவலைகளும் அதிக அளவில் அவர்களை சூழ்ந்துள்ளது, சமூகத்தோடு இணங்க வேண்டிய இளைஞர்கள் வழி தவறி விடுவார்களோ என்ற எண்ணமும் கவலையும் தற்போது அதிக பெற்றோர்கள் மனதில் எழுகிறது அதற்கு முக்கிய காரணம் இந்த போதைப்பொருள் விவகாரம்!
இதனால் தமிழகத்தில் வருகின்ற அடுத்த தலைமுறைகளா எப்படி தமிழாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லப் போகிறார்கள் என்ற கேள்வி பெரும் கேள்வியாகவே உள்ளது. அதுமட்டுமின்றி அப்படிப்பட்ட ஆண்களிடமிருந்து பெண்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்த பரிதவிப்பும் பெண்களைப் பெற்றோர்களுக்கு அதிகமாக இருந்துள்ளது. மேலும் இன்றைய சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் அனைத்துமே பலரையும் பல விதங்களில் உடன்பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் தெரியாமலே நட்பாக்கி விடுகிறது! ஆனால் அந்த நட்பையும் தவறாக பயன்படுத்தி பல நேரங்களில் பல அசம்பாவிதங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் நடந்துள்ள சம்பவம் செய்திகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துரு என்பவர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார் அப்பொழுது 19 வயதான பெண் ஒருவர் instagram மூலம் அறிமுகமாகி இருவரும் பேசி வந்துள்ளனர் காலப்போக்கில் இவர்களது பேச்சு அதிக நேரமாகி நண்பராக பழகினார்கள் பிறகு இருவரும் தங்களது மொபைல் போன் நம்பரை மாற்றிக் கொண்டு கால் செய்து பேசி வந்துள்ளனர்.அப்பொழுது திடீரென்று ஒரு முறை அந்த இளம் பெண்ணிற்கு அழைப்பு விடுத்த சந்துரு தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை நீ வந்தால் நேரடியாக நாம் சந்திக்கலாம் என்று கூறி வரவழைத்துள்ளார். இந்த பெண்ணும் நண்பரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வேகமாக அங்கு கிளம்பிச் செல்ல சந்துருவின் வீட்டில் ஏற்கனவே அவரது நண்பர்கள் மூன்று பேர் இருந்துள்ளன இதனை பார்த்த அந்த இளம் பெண் பதறி அடித்து சந்துருவை சத்தம் போட்டு இருக்கிறாள் இருப்பினும் அங்கு கூடியிருந்த இவரது நண்பர்கள் அந்த இளம் பெண்ணை மிரட்டி கட்டாயப்படுத்தி கூட்டு பலாத்காரத்தம் செய்துள்ளனர். மேலும் இதனை வீடியோ எடுத்து வைத்து அந்த பெண்ணையும் மிரட்டி வந்துள்ளனர்.
வீட்டில் கூறுவதற்கு பயந்து அந்த இளம் பெண்ணும் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையிலே அது இளம் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் சந்துரு எடுத்த வீடியோவை அந்த பெண்ணிற்கு பார்த்த மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துவிட்டார் இதனால் அவர்களது திருமணமும் நின்று போனது. இப்பொழுது தனக்கு நடந்தது போன்று யாருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காக தற்போது திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்துருவும் அவரது நண்பர்களும் செய்த அனைத்தையும் எடுத்துக் கூறி அவர் மீது புகார் அளித்தார் இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சந்துரு மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர். இப்படி ஒரு விவகாரம் ராமநாதபுரம் மாவட்டத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.