முன்பு தகவல் தொடர்பில் எவ்வளவு பின்னோக்கி இருந்தோமோ அதற்கு நேர்மாறான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் சில வருடங்கள் பின்னோக்கி சென்று பார்த்தால் நம்மிடம் தற்போது இருப்பது போன்று அனைவரிடமும் அதாவது குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் நான்கு பேரிடமும் மொபைல் போன் இருந்ததில்லை குடும்பத்திற்கு ஒரு மொபைல் போனாவது இருந்ததா என்றால் அதுவும் கிடையாது கடிதங்களே பெரும்பாலான இடங்களில் தகவல் தொடர்பிற்கு சாதனங்களாக இருந்தது. அதற்குப் பிறகு தந்தி வந்தது அதற்கு பிறகு ஒரு ஊருக்கு ஒரு லேண்ட்லைன் போன் அந்த ஊரின் தபால் மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் அதற்குப் பிறகு சில வருடங்கள் கழிந்தது, அதனால் அந்த லேண்ட்லைன் போன் சிலரது வீட்டில் வசதி படைத்தவர்கள் வீட்டில் இரு ஆரம்பித்தது.
அதற்குப் பிறகு ஒவ்வொரு டீக்கடை மற்றும் பெட்டி கடைகளுக்கு அருகில் எஸ்டிடி பூத் என்ற ஒரு மொபைல் போன் பேசும் இடம் அமைக்கப்பட்டிருக்கும் அங்கு சென்று காயின் மூலம் தங்களது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பேசிக்கொள்வார்கள்.இதனைத் தொடர்ந்து கைக்கு அடக்கமான பட்டன் மொபைல் போன்கள் வர ஆரம்பித்தது அதிலும் குறிப்பாக nokia அப்பொழுது மிகவும் பிரபலமாகவும் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மொபைல் போன் சாதனமாகவும் நிறுவனமாகவும் விளங்கியது. காலங்கள் செல்லச் செல்ல பட்டன் போன் சற்று பெரிதாக மாறியது, அந்த நேரங்களில் குடும்பத்தில் ஒருவரிடம் ஆவது இது போன்ற செல்போன் இருப்பது வழக்கமாக இருந்தது அதன் மூலம் தங்களது தகவலை பிறரிடம் தெரிவித்து வந்தார்கள் அதோடு தொடர்ச்சியாக பல கம்பெனிகளின் மொபைல் போன்கள் இந்தியாவில் குவிய ஆரம்பித்தது பல நிறுவனங்கள் இந்தியாவிலேயே தனது நிறுவனத்தை தொடர்ந்தார்கள் இந்தியாவிலிருந்து மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டது அதற்குப் பிறகு தற்போது நம்மிடம் இருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் நம் கைக்கு வந்தது.
இந்த மொபைல் போனின் மூலம் அருகில் இருப்பவர்கள் மட்டுமின்றி வேறு மாநிலங்களில் உள்ளவர்களிடமும் வேறு நாட்டில் உள்ளவர்களிடமும் எளிதாக பேசிக்கொள்ள முடிகிறது ஏன் அவர்களை முகத்திற்கு முகமாக பார்த்து பேசும் அளவிற்கு வீடியோ கால் வசதியும் அதிகமாகிவிட்டது அந்த வகையில் இந்த தகவல் தொடர்பு தற்போது பலரால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு சாதனம் மற்றும் ஆப் என்றால் அது whatsapp! இந்த whatsapp ஆண்ட்ராய்டு மொபைல் போன் உடைய ஆரம்பித்த காலத்திலேயே பலரால் உபயோகப்படுத்தப்பட்டது தற்போது இந்த ஆப் இல்லாமல் ஒருவரும் இருக்க மாட்டார்கள் அது பல அப்கிரேடுகளும் வந்து பல சாதனங்களையும் பெற்றுள்ளது, பெரும்பாலான ஆன்லைன் வியாபாரங்கள் இந்த whatsapp மூலமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது வாட்ஸ் அப் குரூப்பிலும் பலர் தங்களது வேலைகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் பல நேரங்களில் பலரது நம்பரையும் பதிவு செய்து வாட்ஸ் அப்பிற்கு செய்தி அனுப்ப வேண்டிய நிலைமை நமக்கு எந்த நேரத்திலும் ஏற்படலாம் ஆனால் அவர்களது நம்பர் நமக்கு தேவையில்லை ஆனால் இந்த நேரத்திற்கு அவர்களிடம் இதனை whatsapp மூலமாக அனுப்ப வேண்டும் என்பதற்காக ஒருவரின் நம்பரை நாம் பதிவு செய்தே பிறகு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அல்லது தகவல்களை அனுப்பபும் படி இருந்தது ஆனால் இனி அந்த அவஸ்தை தேவை இல்லை, ஏனென்றால் யார் ஒருவருக்கு நீங்கள் ஒரு தகவலை அனுப்ப வேண்டுமோ அவரது நம்பரை காப்பி செய்து பிறகு சர்ச் பட்டனை தொடுத்து காபி செய்த அந்த நபரின் நம்பரை அதில் பேஸ்ட் செய்து சர்ச் பண்ணும் பொழுது அவர் வாட்ஸ் அப்பில் இருக்கிறார் என்றால் நேரடியாகவே சாட் என்ற ஒரு வசதி நமக்கு கிடைக்கிறது அதன் மூலம் நாம் எளிதாக ஒருவரது நம்பரை சேவ் செய்யாமலே சாட் செய்து கொள்ளலாம்! இந்த ஒரு புதிய வசதி பலருக்கும் தற்போது தெரியாமல் இருக்கிறது அதனால் இதனை உபயோகப்படுத்தி பிறருக்கும் கூறுங்கள்!