24 special

பாஜக-அதிமுக இணைய வாய்ப்புள்ளது... கிருஷ்ணசாமி கொடுத்த லீக்!

edapadi, pm modi
edapadi, pm modi

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் அனைத்து கட்சிகளும் அதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வருகின்றனர். இதற்கிடையில் தேசிய கட்சியான பாஜகவில் இருந்து அதிமுக விலகியது தமிழக கட்சியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக டெல்லி சென்று வந்த பிறகுதான் அதிமுக-பாஜக இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வந்தன, அதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை விமர்சித்தது தான் அதிமுக தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட முக்கிய காரணம் என இரு கட்சிகளிடம் பனிப்போர் நிலவி வந்தது. 


பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டி, தேசிய கூட்டணியில் இருந்து அதிமுக விலகி கொள்வதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி உறுதியாக தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறுவது நடக்காது என்று கேபி முன்னுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்."எந்த சூழலிலும் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது. தேர்தல் நேரத்தில் பாஜக-அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திருப்பும் செயல் என்று கூறியுள்ளார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது நாள் வரை கூட்டணி முறிவு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை?பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று கேபி முனுசாமி  மறுப்பு தெரிவித்த நிலையில், அதிமுகவுடன் பாஜக டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி புதிய தகவலை கொடுத்துள்ளார்.  அதாவது, அண்ணாமலை மட்டுமே கூட்டணி விரிசலுக்கு காரணம் என யாரும் தெரிவிக்கவில்லை. வார்த்தை போரால் தேசிய கட்சி உடைந்து விடும், சிதைந்து விடும் என்று கூறமுடியாது. தேசிய கட்சி தலைவர்களுக்கு தெரியும் எப்படி அடுத்த கட்ட நகர்வு நகர்த்த வேண்டும் என்று, மேலும் திமுக ஆட்சியில் இதுவரை ஏதும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து வந்தவர்வகள் மக்களிடம் நல்ல பெயரை எடுக்கவில்லை. எனவே தற்போது கூட்டணி குறித்து பாஜக-அதிமுகவிடம் பேசி வருகின்றனர். நிச்சயம் 10 முதல் 15 நாட்களுக்குள் நல்ல முடிவு வெளியாகும் என்று டெல்லி தலைவர்கள் கூறுவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் அழைப்பை தொடர்ந்து நிராகரித்து வருகிறதாம் அதிமுக பொறுத்திருந்து பார்ப்போம் எடப்பாடியின் நகர்வு தனித்து இருக்குமா? இல்லை தேசிய கட்சியுடன் கூட்டணியில் கைகோர்க்குமா? என்று வரும் காலத்தில் தெரியவரும் . அதிமுக- பாஜக  விலகிய நிலையில் இன்று மாலை பன்னீர்செல்வம் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக-பன்னீர்செல்வம் இடையே மோதல் இருந்து வந்த நிலையில் இந்த சந்தர்ப்பத்தை ஓபிஎஸ் பயன்படுத்திக் கொள்வார் என தெரிகிறது. இன்று மாலை கூட்டணி குறித்து பேச இருப்பது அரசியல் வட்டாரங்களை உற்று நோக்க வைத்துள்ளது. ஒருபக்கம் பாஜகவுடன் ஓபிஎஸ் கைகோர்ப்பர் எனவும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.