அமைச்சர் உதவி ஸ்டாலின் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். இதனால் இவர் நாடு முழுவதும் எதிர்ப்புகளை பெற்றதோடு நீதிமன்றங்களில் வழக்குகளும் இவர் மீது பதியப்பட்டது. தமிழகத்திலும் இவருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தது. அதுமட்டுமல்லாமல் சுப்ரீம் கோர்ட் அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும் இந்த அமைப்பை ஏற்பாடு செய்த அமைப்பாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடர்க்கப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டும் தமிழக அரசிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் விளக்கம் தர கோரி நோட்டீஸ் விட்டது.
அதோடு நிற்காமல் இவர் பேசிய கருத்துக்கள் I.N.D.I.A கூட்டணியில் எதிரொலித்து அங்கு திமுகவிற்கு அதிருப்தியான சூழல் நிலவியது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இனி சனாதனத்தை குறித்து வாய் திறக்க வேண்டாம் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதனால் திமுகவை சேர்ந்தவர்கள் சனாதனத்தை குறித்து பேசாமல் இருந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது பற்றி கேள்விகள் கேட்கப்படும் பொழுதும் நான் எங்கு சனாதனம் பற்றி பேசினேன் நீங்கள் தான் தற்போது பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று உதயநிதி அனுப்பியதும் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. மேலும் இந்த கருத்திற்காக எத்தனை போராட்டங்கள் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் ஆனால் எதிர்கட்சி கூட்டணியில் மட்டும் எந்த அதிருப்திகளையும் பெற்று விடக்கூடாது என்பதற்காக அங்கு இருக்கும் நிர்வாகிகளை சமாதானம் செய்யும் நோக்கில் திமுக சார்பில் நடத்தப்பட உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கு சோனியா காந்தியை அழைக்க திட்டமிட்டுள்ளது திமுக அரசு.
அதுவும் திமுகவிலிருந்து தொடர்ந்து புறக்கணிப்புகளை சந்தித்து, எம்பி சீட்டு கிடைக்காது என்ற குழப்பத்தில் கனிமொழி இருந்து வரும் நிலையில் சோனியா காந்தியை சிறப்பு விருந்தினராக அழைத்து மாநாட்டில் பங்கு பெற வைக்கும் பொறுப்பை பெற்றுள்ளார். கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை நத்தம் ஒய் எம் சி ஏ திடலில் மகளிர் உரிமை மாநாடு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல பெண் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியை விசாரித்த பொழுது உதயநிதி தற்போது சனாதனத்தை பற்றி பேசி பெறும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ள காரணத்தினால் இதுதான் சாக்கு இதனை நமக்கு சாதகமானதாக மாற்றி நாம் ஸ்கோர் அடித்து விட வேண்டும் என்பதற்காக கனிமொழி இந்த திட்டத்தை போட்டு கொடுத்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு உதயநிதிக்கு உடன்பாடு இல்லை எனவும் எப்படியும் இந்த விவகாரம் விரைவில் உட்கட்சி பூசலாக வெடிக்கும் எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் கனிமொழிக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தேர்தல் வரும் எம்.பி தேர்தலில் தோற்றால் கண்டிப்பாக திமுக கட்சியில் இருந்தே ஒதுக்கி வைத்துவிடும் முதல்வர் குடும்பம் எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்.பி தேர்தலில் விருப்பப்பட்ட தொகுதி அப்படியே தோற்றாலும் மாநிலங்களவை எம்.பி'யாவது வாங்கி விடவேண்டும் என கனிமொழி தரப்பு வேறு மாதிரி ஸ்கேட்ச் போட்டு காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.