24 special

மோடி கைப்பட எழுதி கொடுத்த லெட்டர்.. இனி தான் இருக்கு ஆட்டம்! பொது வெளியில் உடைத்து பேசிய அண்ணாமலை

MKSTALIN,ANNAMALAI
MKSTALIN,ANNAMALAI

சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில்  கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் தனது அதிரடியான பதில்கள் மூலம் தமிழக அரசியலை திரும்ப வைத்துள்ளார். அவர் அந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் நடந்த தனிப்பட்ட சந்திப்பைப் பற்றிய தகவலையும் அவர் வெளிப்படையாக கூறினார்  “கடந்த ஆண்டு ஒரு அரசியல் கூட்டத்தின் பின், PM என்னை மேடையின் பின்பக்கம் அழைத்து ‘உன் எடை என்ன?’ என்று கேட்டார். போலீசில் இருந்த காலத்தைச் சொல்லியதும், இப்போது எவ்வளவு எனச் சொல்லியதும், அவர் ‘10–12 கிலோ குறைக்க வேண்டும்’ என்று நேரடியாக காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். அது கட்டளை மாதிரி இருந்ததால், கடந்த 5–6 மாதமாக அதை ஒரு மிஷனாக எடுத்துக்கொண்டேன். அதற்காகத்தான் ‘Iron Man’ சவாலையும் செய்தேன். அதற்காகத்தான் அவர் சந்திப்பில் கொஞ்சம் அதிகமாக சந்தோஷப்பட்டார்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.


அண்ணாமலையின் அரசியல் நடை ஆக்ரோசமாக இருக்கிறதே என்ற கேள்விக்கு  

“தமிழகத்தில் நான் அரசியலை ‘போர்க்களம்’ என்றே பார்க்கிறேன். தமிழ்நாட்டில் அமைதியான முறையில் அரசியல் செய்ய முடியாது என்றும், இங்கு நடப்பது போர் என்பதால் அதற்கு ஆக்ரோஷமாகவே செயல்பட வேண்டும் என்றும், அப்படி செயல்பட்டதன் மூலம் தனக்கு நல்ல பெயரே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்

அதிமுக குறித்து  ஏற்பட்ட முன்விரோதம் பற்றி கேட்டபோது, “அது பரவாயில்லை. அழகாக வித்தியாசமாக இருப்பது அரசியலில் சாதாரணம். 2026 தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சொல்வதை எல்லாம் நான் ஒத்துக்கொள்வது சாத்தியமில்லை. அதுபோல எனது கருத்தையும் அவர்கள் ஒத்துக்கொள்வது சாத்தியமில்லை. ஆனால் போர்க்களத்தில் மரியாதையான கூட்டாளிகளாக இருக்க முடியும்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார் 

கட்சி பதவியில் இல்லாததால் அவர் பின்தள்ளப்பட்டார் என்ற கேள்விக்கு, “இப்போது எனக்கு 30–40% நேரம் கிடைக்கிறது. விவசாயம், ஆர்கானிக் பண்ணை, foundation, business, உடற்பயிற்சி என என் வாழ்க்கையின் மற்ற பக்கங்களையும் கவனிக்க நேரம் கிடைத்திருக்கிறது. தேர்தல் காலம் வந்ததும் மீண்டும் 24x7 பணி தான். பிரதமர் மோடியின் முகமே தமிழ்நாட்டிலும் பாஜகவின் தேர்தல் முகமாக தொடரும். கட்சி ரீதியான அனைத்து பணிகளையும் பார்க்க வேண்டிய அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். இதனால் குடும்ப தலைவனாகவும் செயல்பட முடிகிறது.

பல அவமானங்களுக்குப் பிறகு நோட்டா கட்சி என்ற நிலையிலிருந்து மேலே வந்துள்ளோம். முன்பு அதிகபட்சம் 7 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டோம். தற்போது அது 20-க்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. இதனால் மக்களிடம் நாங்கள் அதிகளவில் சென்றடைந்துள்ளோம். எடுத்த உடனேயே மக்கள் நம்பி வாக்களிப்பதில்லை. நாள்பட்ட உழைப்பே பலனளிக்கும். அதன்படி பல தலைவர்கள் சேர்ந்து பணியாற்றுவதால் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் பாஜகவின் வெற்றி மரமாக மாறலாம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்து ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளை நேரடியாக மறுத்த அண்ணாமலை, “பீகாரில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டபோது, 17 நாட்களில் ஒருவரும் முறையீடு செய்யவில்லை. அது அனைத்தும் விதிமுறைக்குள் செய்யப்பட்டதே. தமிழ்நாட்டிலும் அப்படித்தான் இருக்கும். யாரும் கத்தியால் வெட்டி அகற்ற முடியாது. இதை திமுக  புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.“NEPக்கும், மொழி விவகாரத்திற்கும் DMK காட்டும் எதிர்ப்பெல்லாம் பயமுறுத்தும் அரசியல். இன்று இளம் தலைமுறையோ, நாடோ அதைப் பார்க்கவில்லை” என தடாலடியாக கூறினார்.