24 special

அதிமுகவுடன் உடன் பேச்சுவார்த்தையை நிறுத்திய முக்கிய கட்சிகள்..! களத்தில் அடுத்த ட்விஸ்ட்..!

BJP. Edapaadi palanisamy
BJP. Edapaadi palanisamy

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை மும்முனை போட்டியாக தொடரவுள்ளது. முதல் கட்சியாக திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு வேட்பாளர்கள் கலந்தாய்வு என்று விறுவிறுப்பாக ஆலோசனைகளை செய்து வருகிறது. மாறாக அதிமுக கட்சியும் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில் தேமுதிக மற்றும் பாமக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளின் முடிவுகளை திடீரென்று மாற்றியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் தேமுதிக கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரை சென்ற நிலையில் தற்போது தேமுதிக பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதாவது அதிமுகவுடன் பிரேமலதா விஜயகாந்த் சில நிபந்தனைகள் கேட்டதால் அதனை அதிமுக தரமறுத்ததால் பாஜக பக்கம் தங்களது கூட்டணியை திருப்பியுள்ளது தேமுதிக. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் மொஹா கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணிகள் பிரிந்து சென்றது. 

தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி தொடங்கி தேர்தலை சந்தித்தது, இந்நிலையில், நாடளுமன்ற தேர்தலுக்காக  பாஜக கூட்டணியில் இருந்து வெளியான அதிமுக தீவிரமாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், சைலண்டாக பாஜவும் தங்களது பக்கம் கூட்டணியை கட்டமைத்து வந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொண்டும் அதிமுகவுடன் சுமுகமான ஒப்பந்தம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே பாஜக தலைமையில் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரி வேந்தரின் ஐஜேகே மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கட்சியாக தமிழகத்தில் உருவானது. பாஜக பக்கம் பெரிய கட்சிகள் ஏதும் இல்லை என்று பேசப்பட்ட நிலையில் பாமக, தேமுதிக கட்சிகள்பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. நடாளுமன்ற தேர்தலில் தேமுதிக 5 தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டும் அதிமுக தர மறுப்பதால் பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளது. இதனால் பாஜகவிடம் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம்.

மொத்தமாக 10 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். அதிலும் அங்கு ஒரு ராஜ்ய சபா கொடுக்க பாஜகவும் யோசித்து வருகிறதாம். இறுதி முடிவு எட்டப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல் பாமகவும் தேர்தலில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நிறுத்தி பாஜக பக்கம் சென்றுள்ளதால். அதிமுகவில் எஸ்.டி.பி. ஐ மற்றும் புதிய தமிழகம் கட்சி மட்டுமே கூட்டணியை வைத்துள்ளது. வேறு எந்த கட்சிகளும் பெரியதாக இல்லாததால் தனித்து நிற்பதாக கூறப்படுகிறது. இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக என்ன முடிவை எடுக்க போகிறது என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.