24 special

தேர்தலுக்காக அடக்கி வாசிக்கும் திமுக!

dmk,bjp
dmk,bjp

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிற காரணத்தினால் அனைத்து கட்சிகளும் தற்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளது அதிலும் குறிப்பாக திமுக தன் பேச்சை முற்றிலும் அடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஹிந்துத்துவம் குறித்த பேச்சுகளையும் இந்துத்துவத்தை எதிர்க்கும் வகையிலான சர்ச்சைகளில் பெயர் பெற்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் அளவிற்கு அக்கட்சியின் முதல் மற்றும் மூத்த அறிஞரான அண்ணாதுரை யிலிருந்து தற்போது இளம் வாரிசாக அரசியலில் நுழைந்த உதயநிதி ஸ்டாலின் வரையிலும் இந்து மதம் குறித்த சர்ச்சையான கருத்துக்களை முன் வைக்காமல் இருந்ததில்லை. அதோடு திமுக என்றாலே இந்து விரோத கட்சி என்ற முத்திரைகள் சமூக வலைதளங்களில் குத்தப்படுகிறது இதற்கு முக்கிய காரணம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சனாதனம் குறித்து பேசிய கருத்துக்களும் அந்த கருத்தினால் ஏற்பட்ட எதிர்ப்புகள் சந்தித்த விளைவுகள் அவை அனைத்தையும் தாண்டி இந்த விவகாரம் நீதிமன்றம் வரை அமைச்சர் உதயநிதியை கொண்டு சென்றது. 


மேலும் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி கூட அமைச்சர் தன்னுடைய பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும் என்ற அறிவுரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு  வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சனாதனம் குறித்த எதிர்ப்பு பேச்சுகள் இந்து மதம் குறித்த சர்ச்சை பேச்சுகள் திமுகவிடமிருந்து வராமல் இருந்த நிலையில் சமீபத்தில் நீலகிரி எம்பி ராசா தேவையில்லாமல் வம்பில் சிக்கி உள்ளார். 

அதாவது சமீபத்தில் இவர் திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்தியா ஒரு தேசமே கிடையாது, அது ஒரு தனி கண்டம் தமிழ்நாடு ஒரு தனி நாடு கேரளா ஒரு தனி நாடு என்று பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையிலும் ராமருக்கு நாங்கள் எதிரி என்ற வெறுப்புணர்வை பறக்கும் வகையிலும் பேசி திமுக விற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டார். ஏற்கனவே ஹிந்து மதம் குறித்த எதிர்ப்பான கருத்துக்கள் திமுக தரப்பில் இருந்து வந்ததால் இந்த சமயத்தை சேர்ந்த மக்கள் திமுக மீது அதிருப்தியில் இருந்து வந்தனர், அதனை மறக்கடிப்பதற்கான செயல்களில் திமுக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ராசா மீண்டும் ராமரை குறித்து சர்ச்சையான வகையில் பேசி திமுகவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தினார். 

இந்த நிலையில், எப்படி மக்களின் மனதை மாற்றுவது பிற்காலத்தில் திமுக என்றால் ஹிந்தி எதிர்ப்பு கட்சி என்று யாரும் கூறக்கூடாது அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்ற உத்தரவையும் தேர்தல் முடியும் வரை ஹிந்து மதம் குறித்த சர்ச்சைகளையும் எதிரான கருத்துகளையும் ஹிந்து கடவுள் குறித்த கருத்துக்களையும் யாரும் பொது மேடையில் பேசக்கூடாது என்று முக்கிய தலைவர்களுக்கும் திமுக பேச்சாளர்களுக்கும் அறிவாலய தலைமை உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அது மட்டும் இன்றி இந்து மதத்திற்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்கள் அதனால் மனதளவில் புண்படும் மக்களின் வாக்குகள் அனைத்துமே பாஜகவிற்கு சாதகமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து திமுக தற்போது ஹிந்து சமயத்தை சேர்ந்த மக்களின் ஓட்டுகளை கவருவதற்கு பல திட்டங்களை செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் வருடம் தோறும் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் குடிமகன்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தில் இந்த முறை  200 மூத்த குடிமக்களை முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளது. 

அதோடு ராமேஸ்வரத்தில் ஒன்பது இடங்களில் ராமர் வழிபட்ட புண்ணிய பூமி என வாரத்தில் சனி ஞாயிறு கிழமைகளில் 80 ரூபாய் கட்டணத்தில் சுற்றி பார்க்க வசதியாக அரசு பேருந்துகள் இயக்கம் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளனர்! ஆனால் இதற்கு, வருடமெல்லாம் இந்து மதத்தை எதிர்த்தும் இந்து மக்கள் மனதை புண்படுத்தும் படியும் பேசி வந்த திமுக தற்போது தேர்தல் பயத்தில் இந்து மக்களின் மனதை குளிர்விக்கும் படியான நடவடிக்கைகள், 

குறிப்பாக எந்த கடவுளையும் இழிவாக பேசவேண்டாம், எச்சரிக்கையாக இருக்கவும் என நிர்வாகிகளிடம் மறைமுகமாக கூறிவருகிறதாம் திமுக தலைமை என தகவல்கள் கசிகின்றன.