24 special

வெளியான1000 கோடி லஞ்சம்.. கே.என் நேரு விஷயத்தில் மொத்தமாக சிக்கும் முக்கிய தலைகள் ...சட்ட பிரிவு 66(2) தெரியுமா

K.N.NEHRU
K.N.NEHRU

தற்போது தமிழகத்தை உலுக்கியுள்ள சம்பவம் என்றால் 1000 கோடி முறைகேடு தான். தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  துறையில் டெண்டர்களை கையாளுவதன் மூலம் நடந்த பெரிய முறைகேடுகளை சுட்டிக்காட்டியுள்ள அமலாக்கத்துறை, இந்த டெண்டர் மூலம் குறைந்தபட்சம் ரூ. 1,020 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. இதில் கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை மேற்கோள் காட்டியுள்ளது.


இந்த ஊழல் குறித்து தமிழ்நாடு காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்கக் கோரி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2)-ன் கீழ், 258 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தை டிசம்பர் 3 அன்று மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு அனுப்பியுள்ளது. இது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்க இது உதவும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான உள்ளாட்சி  துறையில் நடந்த ஒரு பெரிய முறைகேட்டைக் குறித்து தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத்துறை எழுதிய இரண்டாவது கடிதம் இதுவாகும்.  எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாவிட்டால், பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறை ஒருதலைப்பட்சமாகத் தொடங்க முடியாது. இருப்பினும், பண மோசடி குற்ற சட்ட பிரிவு 66(2) ஆனது, மற்ற ஏஜென்சிகளுடன் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அதன்மூலம் அமலாக்கத்துறை தனது பணமோசடி விசாரணையைத் தொடங்க வழிவகுக்கும் இந்த மூலம் அடிப்படை குற்றங்களின் கீழ் எப்.ஐ.ஆா பதிவு செய்யுமாறு அவர்களை வலியுறுத்தவும் வழி செய்தது.

உள்ளாட்சித் துறையின் பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ரெய்டின் போது நேருவின் உதவியாளர்களின் தொலைபேசிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளாட்சியில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 'கட்சி நிதி' என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சரின் உதவியாளர்களின் தொலைபேசிகளிலிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் செய்திகள், உரையாடல்கள் அல்லது கணக்கீட்டுத் தாள்களின் அடிப்படையில், ரூ. 1,020 கோடி மொத்த லஞ்சப் பணம் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக அமலாக்கத்துறை பல குறிப்பிட்ட நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆதாரம் அரசாங்க ஒப்பந்தங்களில் நடக்கும் ஒரு பெரிய முறைகேட்டின் சின்ன புள்ளி மட்டுமே என்று கூறியுள்ள அமலாக்கத்துறை, சமூகக் கழிவறைகள், துப்புரவுத் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், துப்புரவாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள், நீர்/ஏரிப் பணிகள் போன்ற கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் உரிமையாளராக உள்ள ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (True Value Homes) சம்பந்தப்பட்ட சி.பி.ஐ வங்கி மோசடி தொடர்பான பண மோசடி வழக்கை விசாரிக்கும் போது, ஏப்ரல் மாதம் நேரு மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்களில் இந்த ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பல அரசியவாதிகளின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ரியல் எஸ்டேட்  துறையும் இதில் இருக்கிறதாம்.. 

கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு திறமையாகச் செயல்பட்ட ஒரே துறை வசூல், கமிஷன் மற்றும் ஊழல் துறை மட்டுமே என அண்ணாமலை  விமர்சித்துள்ளார்.மேலும், அமலாக்கத்துறையின் கடிதத்தை இழுத்தடிக்காமல் ஊழல் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.