24 special

தலைமை நீதிபதி போட்ட போடு.... தெறித்தோடிய வழக்கறிஞர்... பறந்த அதிரடி உத்தரவு ... இனி இப்படித்தான்

SURYAKANT
SURYAKANT

 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சூர்யகாந்த் பொறுப்பேற்றதில் இருந்து, நீதிமன்றத்தின் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் நீதிமன்றம் வலுவான நிலைப்பாட்டை எடுக்க தொடங்கியுள்ளது.


இந்தநிலையில்  மாயமான 5 ரோஹிங்கியா இஸ்லாமியர்களை  கண்டுபிடித்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‛‛சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவோருக்கு அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட சலுகைகளை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். எல்லை தாண்டி  சட்ட விரோதமாக உள்ளே வந்தோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க வேண்டுமா? இங்கும் ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கான சலுகைகளை இங்குள்ள மக்கள் அனுபவிக்க உரிமை உள்ளது'' எனக்கூறி கடுமையாக விமர்சனம் செய்தார்.

சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் மற்றும் அகதிகள் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வது அவசியம். ஒரு அகதி சட்டவிரோதமாக வந்தாலும், அவர் முதலில் சரணடைந்து, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி அரசிடம் இருப்பிடம் கோருவார். ஆனால், சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் அவ்வாறு செய்யாமல், ரகசியமாக சமூகத்தில் கலந்து, வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களை பெற பெறுகிறார்கள் ர். அவர்களை நல்லவர்கள் போல் சித்தரித்து சட்டவிரோத ஊடுருவலை நியாயப்படுத்த, அகதிகளாக சித்தரிக்கும் முயற்சி எப்போதும் நடந்து வருகிறது. மேலும், சட்டவிரோத ஊடுருவல் என்பது ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல; இது ஒரு தேசியப் பாதுகாப்பு பிரச்சனை  ஆகும். இந்த ஊடுருவலுக்கு பின்னணியில், ஊடுருவல்காரர்கள் மக்கள் தொகைக் அதிகமாக்கி அவர்களுக்கு என தனி நாடு , தனி சட்டம் என கோருவது உலகம் முழுவதம் நடேந்தேறி வருகிறது.

இந்த நிலையில் ரோஹிங்கியாக்கள் தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்துக்கள் முக்கியதுவம் பெற்றுள்ளது.  1951 ஆம் ஆண்டு அகதிகள் மாநாட்டில் இந்தியா கையெழுத்திடாததால், இந்தியாவில் அகதி அந்தஸ்து என்பது நடைமுறையில் இல்லை. ஒருவர் சட்டவிரோதமாக எல்லையை கடந்து வந்தால், அவர் சட்டவிரோத ஊடுருவல்காரர் ஆகிறார். சமீபத்தில், நாடு கடத்தப்பட்ட ரோஹிங்கியாக்களை நாடு கடத்தப்பட்டனர் அவர்களை திரும்பக் கொண்டுவர கோரித் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‛‛அந்த குறிப்பிட்ட மக்களுக்கு இங்கு சட்டப்பூர்வமான அந்தஸ் இல்லை. வடகிழக்கு மாநிலங்கள் என்பது மிகவும் சென்டிட்டவான ஏரியா என்பது உங்களுக்கு தெரியும். இப்படி இருக்கும்போது சட்டவிரோதமாக ஒருவர் நுழைந்து, அவர் பிடிபட்டால் அவர்களுக்கு நாங்கள் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?'' என்று மீண்டும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‛‛இந்த விஷயத்தில் சட்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம்'' என்றார். அதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‛‛நீங்கள் ஆட்கொணர்வு மனு செய்துள்ளீர்கள். மீண்டும் அவர்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறீர்கள். சட்டம் அனைவருக்கும் சமமானது. குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த ஒரு குழுவினருக்கு மட்டும் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் அது இங்குள்ள மற்ற நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் பொருந்தும்'' என்றார்.

இதேபோல், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் எல்லை வேலி தொடர்பான ஒரு வழக்கு நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 600 கி.மீ. எல்லைக்கு இன்னும் வேலி அமைக்கப்படாமல் உள்ளது. மாநில எல்லைகளில் நிலம் கையகப்படுத்துவதில் மம்தா அரசு  பொறுப்பற்ற தன்மையாக இருப்பதால் , வேலி அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதுவும் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்  என்று உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி. அமிர்தா சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.