24 special

மாற்றப்படும் செல்வப்பெருந்தகை! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? அதிரடி திருப்பம்

MKSTALIN,SELVAPERUNTHAGAI
MKSTALIN,SELVAPERUNTHAGAI

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கடந்த ஆண்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். க அவர் பதவியேற்று கிட்டத்தட்டஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது அவருக்கு எதிராக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும் என்று கோரியும், அவரது நிலைப்பாடு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது, இப்படியே சென்றால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் மாவட்டத்தலைவர் கூறியுளார்கள். 


திமுகவின் ஆட்சியே காமராஜர் ஆட்சி தான் என்று செல்வப்பெருந்தகை கூறியதற்கு காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவின் ஆட்சியை காமராஜரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசியதற்கு விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்து ட்வீட் ஒன்று போட்டிருந்தார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ட்வீட் பதிவில், "பெருந்தலைவர் ஆட்சியை பார்க்காத, படிக்காதவர் அதை மற்றவர்களுடன் ஒப்பிடுவது தவறு. அன்புத் தலைவர் ராஜீவ் காந்தியின் கனவு காமராஜர் ஆட்சி. அது உண்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அது ஒருநாள் நடக்கும்" இவ்வாறு கூறியிருந்தார்.இந்தநிலையில் தான் சத்தியமூர்த்தி பவனில், இந்திரா காந்தி நினைவஞ்சலிக் கூட்டத்தை ஒரே நேரத்தில் செல்வப்பெருந்தகையும், மகிளா காங்கிரஸ் தலைவியும் தனித்தனியே நடத்தியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

சென்னை சத்தியமூர்த்தி பவனில், 31-10-2025 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அனுசரிக்கப்பட்டது. ‘விழா அழைப்பிதழில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளின் பெயர் இடம்பெறவில்லை’ எனக் கூறி, அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்த மகளிர் அணித் தலைவி ஹசீனா சையத், தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதேசமயத்தில் சத்தியமூர்த்தி பவனிலேயே தனியாக அஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடவே, சமூக வலைதளப் பக்கத்தில், ‘இந்திரா காந்தியின் நினைவுநாளில், வேண்டத்தகாத செயலில் ஈடுபட்ட வன்ம புத்தியைக் கொண்டவர்களால்தான், நமது இயக்கத்துக்குப் பின்னடைவு’ எனக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார் ஹசீனா.

இது குறித்து ஹசீனா கூறுகையில் . “ஆண்டுதோறும் இந்திரா காந்தியின் நினைவுதினத்துக்கு எங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படும். ஆனால், இந்த முறை அழைப்பிதழில்கூடப் பெயர் இல்லை. வெளியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வேண்டும் என பா.ஜ.க-வை எதிர்த்து போராடுகிறோம். ஆனால், கட்சிக்குள் அந்த 33% பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதைச் செய்யவிடாமல் தடுப்பது யார்... இதற்கு முன்பு மே மாதம் காமராஜர் அரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், எனக்கு இருக்கைகூடப் போடவில்லை. செப்டம்பரில் நடைபெற்ற திருநெல்வேலி மாநாட்டில் என்னைப் பேசவே விடவில்லை. இப்படி, தமிழ்நாடு காங்கிரஸில் நடக்கும் பிரச்னைகளுக்கு, மாநிலப் பொதுச்செயலாளர் டி.செல்வமும், அமைப்புப் பொதுச்செயலாளர் ராம் மோகனும்தான் காரணம்” என்றார். 

இந்தநிலையில் தான் திமுக கூட்டணி  காங்கிரஸ் தலைவர் மாற்றம் செய்திகள் டெல்லியில் பேச துவங்கிவிட்டார்களம் . எப்போது வேண்டுமானாலும் 25 மாவட்ட தலைவர்கள் 3 எம்.எல்ஏக்கள்  மீண்டும் டெல்லி செல்ல உள்ளார்களாம். அதேபோல் செல்வப்பெருந்தகை அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருகிறார். இது தலைமைக்கே தெரியாதாம். லண்டனில் செல்வப் பெருந்தகை முதலீடு செய்ததாக கூறப்படுவது பற்றிய முழு விவரங்களைத் திரட்டி அவருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம்  செய்திகள் தற்போது பூதகரமாகி உள்ளது. . இதை சுட்டிக் காட்டி செல்வப்பெருந்தகை மீது விரைவில் அமலாக்கத்துறை ஆக்‌ஷன் பாயும் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்கள். இதற்கு தேவையான பல விவரங்களை காங்கிரஸ் புள்ளிகளேஅமலாக்கத்துறைக்கு  அனுப்பி வைத்திருக்கிறார்களாம்