
இந்திய ராணுவம் “ஆப்பரேஷன் திரிசூல்” என்ற மிகப்பெரிய ராணுவப் பயிற்சியை நடத்தி வருவது தற்போது பாகிஸ்தானுக்கு இரவிலும் பகலிலும் தூக்கத்தை பறிக்க வைத்துள்ளது. இந்திய ராணுவம் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயிற்சி ஒரு சாதாரண ராணுவப்பயிற்சி அல்ல, நாட்டின் முழு பாதுகாப்புத் திறனையும் சோதித்து உறுதிப்படுத்தும் அளவுக்கு மிகுந்த ரகசியமும் நவீனமும் கலந்தது என்பதே பாகிஸ்தானை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ஊடகங்கள் “இந்தியா நம்மை அடிக்கத் தயாராகிறது” என கூச்சலிட்டு வருகின்றன. அதிலிருந்து அங்குள்ள அரசியல் வட்டாரங்கள் வரை அதே பீதியால் கலங்கியுள்ளன.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை வங்கதேச எல்லை, பாகிஸ்தான் எல்லை, மற்றும் வடகிழக்குப் பகுதியில் இருந்து வரும் எவ்வித சவாலும் நிமிடங்களில் எதிர்கொள்வதற்கான தயார்நிலையில் உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் அதன் புலனாய்வு அமைப்புகள் பல ஆண்டுகளாக இந்தியாவை சிக்கலில் சிக்க வைக்க முயன்றாலும் இந்தியா ஒவ்வொரு முறையும் அதை தடுத்து வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் எப்போதும் தாலிபான்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றது. ஆனால்ஆட்சிக்கு வந்த தாலிபான்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டை ஏற்கவில்லை. தாலிபான்களுக்கு தங்களுக்கே உரிய கொள்கைகள் உள்ளன — எல்லையை விட்டு கொடுப்பது இல்லை, வெளிநாட்டு ஆட்சிக்குத் தலை வணங்குவது இல்லை, காசுக்கு போராடுவது இல்லை என்பன.
இப்போது பாகிஸ்தான் தாலிபான் பிரச்சினை வெடித்துள்ளத.ஆப்கான் எல்லையில் மீண்டும் வன்முறை கிளம்பியிருக்கிறது. இதே சமயத்தில் இந்தியா தனது மூன்று படைகளையும் (நிலம், கடல், வானம்) இணைத்து “ஆப்பரேஷன் திரிசூல்” என்ற பயிற்சியை மேற்கொள்வதால், பாகிஸ்தான் மனநிலையே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. “இந்தியா திடீரென்று எங்களைத் தாக்கிவிடும், பிறகு பழியை எங்கள்மேல் போட்டுவிடும் ” என பாகிஸ்தானின் ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்திற்கும் அரசுக்கும் இப்போது பெரிய கவலை என்னவென்றால், ஒருவேளை இந்தியா போருக்கு வந்தால் அந்த நேரம் தாலிபான்களும் தங்களது எல்லையில் இருந்து தாக்குவார்கள் என்ற அச்சம். அதே சமயம் அவர்களது நாட்டின் உள்ளே பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பம், மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்து அவர்களுக்கே தாங்க முடியாத சுமையாகிவிட்டது. இரு எல்லையிலும் யுத்தம், உள்ளே குழப்பம் என்ற நிலை உருவானால் பாகிஸ்தான் ஒரு நாட்டாகவே இருக்க முடியாது என்ற நம்பிக்கை அவர்களிடையே பரவியுள்ளது.
இப்படி பல சிக்கல்கள் நிறைந்த நிலையில் பாகிஸ்தான் “நாங்கள் தப்பிக்க ஒரே வழி, உலக நாடுகள் எங்களை காப்பாற்ற வேண்டும்” என்ற பாணியில் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. அவர்களின் உள்நாட்டு ஊடகங்களே “இனி ஒரு போர் வந்தால் பாகிஸ்தான் என்ற பெயரே மிச்சமிருக்காது” என ஒப்புக்கொள்கின்றன. இந்தியாவுக்கு இப்போது உலக அரங்கில் வலுவான இடம் கிடைத்துள்ளது. அமெரிக்கா முதல் ரஷ்யா வரை இந்தியாவுடன் நல்ல உறவைப் பேணி வருகின்றன. சீனாவும் கூட இந்தியாவை நேரடியாக எதிர்க்க முடியாத நிலையில் உள்ளது.
“ஆப்பரேஷன் திரிசூல்” பாகிஸ்தானை மட்டும் அல்ல, இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்ட நினைக்கும் எல்லா நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை. இந்தியா இனி யாருக்கும் அடிமையல்ல, யாரையும் பயப்படுவதுமில்லை என்பதை இந்தப் பயிற்சி உலகுக்கு காட்டி வருகிறது.
இன்றைய இந்தியா பேசுவது மட்டும் அல்ல, செயலில் தன்னை நிரூபிக்கக்கூடிய சக்தியாக மாறிவிட்டது.
