இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த படம் 'இந்தியன்-2' இந்த படத்தின் பணிகள் முடித்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் படத்தின் மீதான எதிரிபார்ப்பு அதிகரித்துள்ளது.
அரசியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில் ஆண்டவரின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற கதையை கூறி படத்தை இயக்கினார். படம் எதிர்பார்ப்புக்கு மேல் இருந்ததால் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனால் கமல் ஹாசன் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார். அதனையடுத்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டானார். தற்போது கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 7ஐ தொகுத்து வழங்கி வருகிறார்.
கமலின் 234 படத்தின் வேலைகள் அட்டகாசமாக துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இணைய இருப்பது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் 'KH 234' படம் தொடர்பான அதிரடியான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
அந்த வீடியோவில், கமல் ஹாசன் கருப்பு சட்டை கருப்பு பேண்ட்டோடு மாஸாக காரிலிருந்து இறங்குகிறார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் வருகின்றனர். மேலும் அந்த வீடியோவிலேயே படத்தின் டெக்னீசியன்கள் தொடர்பான அப்டேட்டும் தெரியவந்திருக்கிறது. அதன்படி ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், சண்டை பயிற்சியாளராக அன்பறிவ் மாஸ்டர்ஸ் பணியாற்றவிருக்கிறார்கள்.
சண்டை பயிற்சியாளர் அன்பறிவு ஏற்கனவே விக்ரம் படத்திற்கு பணியாற்றினார் அதில் சண்டைக்காட்சிகள் எந்த இடத்திலும் சலுப்பை ஏற்படுத்தாத அளவிற்கு மாஸாக இருக்கும். இப்போது வெளியான லியோ படத்திற்கு இவர் தான் சண்டை காட்சிகளை வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்தினம், கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி KH 234 படத்தில் இணைவது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 1987ஆம் ஆண்டு நாயகன் படத்தில் இணைந்தனர். கமல் ஹாசன் பிறந்தநாளான நவம்பர்.,7ல் டீசர் வெளியாகும் என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.