தமிழ்நாட்டில் பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு செய்ய அக்கட்சியின் மேலிட குழுவினர் நேற்று தமிழ்நாடு வருகை தந்தனர். இன்று ஆய்வுப் பணியை தொடங்கி அதன் அறிக்கையை ஆளுநர் மற்றும் தலைமைச்செயலரிடம் அளித்தனர்.தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த கொடி கம்பத்தை, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றினர். அப்போது பாஜகவினருக்கும் காவல்துறைக்கும் ஏற்ப்பட்ட கைகலப்பில் பாஜக நிர்வாகிகளை கைது செய்தனர்.
தொடர்ந்து அக்கட்சியின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்ப்பிரசாத் ரெட்டியை கைது செய்து வழக்கு மேல் வழக்கு போட்டு வருகின்றனர்.முன்னதாக சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கடந்த ஜூன் மாதம் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைதானார். இதே போல் ஆங்காங்கே முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழக அரசால், பாஜகவினர் எதிர்கொண்டு வரும் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த 4 பேர் கொண்ட குழுவில், கர்நாடக முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான டி.வி.சதானந்த கவுடா, மும்பை முன்னாள் காவல் ஆணையரும், மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, எம்.பி. பி.சி.மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நேற்று அவர்கள் சென்னை வந்தனர். பாஜக மேலிட குழு இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டில் இருந்து ஆய்வை தொடங்கினர். தொடர்ந்து கோட்டூர்புரத்தில் உள்ள அமர்பிரசாத் வீட்டுக்கும், அடுத்ததாக திருவான்மியூரில் உள்ள எஸ்.ஜி.சூர்யா வீட்டுக்கும் சென்றனர்.
மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரின் வீடுகள் என மொத்தமாக 7 இடங்களுக்குச் சென்று ஆய்வறிக்கையை தயார் செய்தனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த குழு ஆளுநரிடம் புகார் மனு தாக்கல் செய்தனர். அதில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவதாகவும் இதனை தடுக்க வேணும் என்றும் கூறியுள்ளது. இந்த சந்திப்பின் போது மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு எதிராக புனையப்பட்டுள்ள வழக்கு விபரங்கள். அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் இணைத்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டு நாட்கள் ஆய்வு செய்த அறிக்கையை நாளை டெல்லி பாஜக தலைமையிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பிறகு தமிழக அரசுக்கு டெல்லை தலைமை திமுக அமைச்சர்களை குறி வைக்க அடுத்த ஊழல் பட்டியலை குறிவைக்கும் என்று தெரிகிறது. இப்போது ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு போன்ற சம்பவங்களை கையில் எடுத்து வரும் சூழலில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருவதால் தமிழக அரசு கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். திமுக அரசு இதுபோன்ற அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் இந்த பாஜக மேலிட குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்று பாஜக நிர்வாகிகள் நம்புகின்றனர். திமுக அரசு பாஜக வளர்ச்சியை கண்டு பயந்து வருகிறது அதனால் தான் பொய் வழக்குகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு முன் வைத்து வருகிறது தமிழக அரசு.