24 special

பிரான்சில் பிரதமர் மோடி நிகழ்த்திய அதிசயம்... அவ்வளவு எளிதாக யாரையும் அழைப்பது இல்லையாம்!!

Modi and french president
Modi and french president

ஐரோப்பிய சுற்றுபயணத்தில் இருக்கும் மோடி பிரான்ஸ் அதிபரை அவரின் அதிகார பூர்வ மாளிகையான எலிசி மாளிகையில் சந்தித்திருக்கின்றார்


, இம்மாதிரி அந்நாட்டு அதிபர் மாளிகையில் சந்திப்பது மிக உச்சபட்ச மரியாதைகளில் ஒன்று, அமெரிக்க அதிபர் அயல்நாட்டு அதிபரை சாதாரண மேடையில் சந்திப்பதற்கும் வெள்ளைமாளிகைக்கு அழைத்து சந்திப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா அப்படி.

இந்த பெரும் மரியாதை மூலம் உலகுக்கு இந்தியா சொல்லவரும் விஷயம் சில உண்டு, இந்தியா பிரான்ஸுடன் பல ராணுவ தொடர்புகளை கொண்டிருக்கின்றது, இந்தியாவின் பழைய ரஷ்ய ஆயுதங்களை பிரான்ஸ் நுட்பத்துடன் மாற்றீடு செய்வது அல்லது மேம்படுத்துவது என்பதை இனி வலுபடுத்தும், இந்திய பிரெஞ்ச் கூட்டுதயாரிப்பான நீர்மூழ்கி தயாரிப்பு இனி தொடரும். 

ரஷ்ய விவகாரம் தொடர்பான இந்திய நிலைபாட்டால் அமெரிக்கா குவாட் அமைப்பில் குழப்பம் விளைவித்தால் பிரான்ஸ் அமைக்கும் சீனாவுக்கு எதிரான கூட்டணியில் இந்தியா இணையும் அல்லது இரு அணியிலுமே நீடிக்கும் என பல விவகாரம் உண்டு

சீனா அருகே பிரான்ஸுக்கு சொந்தமான தீவுகள் பல உண்டு என்பதால் சீன எதிர்ப்பு அணியில் பிரான்ஸ் முக்கிய நாடு என்பது குறிப்பிடதக்கது.

அந்த பிரான்ஸின் தலமையகத்தில் ரஷ்யாவினை மோடி கண்டித்திருப்பது மிக சரியான ராஜதந்திரம், அதாவது இந்தியா தனியாக ரஷ்யாவினை கண்டிக்காமல், மேம்போக்கான கண்டிப்பை தெரிவிக்கும் பிரான்ஸுடன் சேர்ந்து கண்டிக்கின்றது.

முன்பு குவாட் அமைப்பின் சார்பாக ரஷ்யாவினை கண்டிக்காத மோடி அதாவது கடும்போக்கு நாடுகளுடன் ரஷ்யாவினை கண்டிக்காத அவர் மேம்போக்கான பிரான்ஸ்சுடன் சேர்ந்து கண்டிப்பது சரியான ராஜதந்திரம், மொத்தத்தில் பிரதமரின் ஐரோப்பிய பயணம் ஐரோப்பிய யூனியனின் பலமான நாடுகளான ஜெர்மன் மற்றும் பிரான்ஸ்க்கு சென்றது மூலம் உலக அரங்கில் இந்தியா ஐரோப்பிய யூனியனுடன் வலுவான தொடர்பினை கொண்டிருப்பதை காட்டுகின்றது.

என்னதான் மேலை உலகம் என்றாலும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் சில சலசலப்புகள் உண்டு, இப்பொழுது இந்தியா தங்களுக்கு ஐரோப்பிய யூனியனினிலும் பலத்த ஆதரவு இருக்கின்றது என்பதை நிரூபித்துவிட்டு புன்னகைக்கின்றது.தேசதலைமகன் மோடியின் ஆட்சியில் தலைநிமிர்ந்து நிற்கின்றது பாரதம்.

credit - பிரம்ம ரிஷி