ஹிமாச்சலப்பிரதேசம் : ஹிமாச்சல பிரதேச சட்டசபை வாயிலில் காலிஸ்தானி கொடி மற்றும் சுற்றுப்புற சுவர்களில் பிரிவினைவாதிகளான காலிஸ்தான் பற்றிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. சட்டசபை வளாகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் பிஜேபி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரிபப்ளிக் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஆம் ஆத்மீயின் ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் சிங் "இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. இது தேச பாதுகாப்பு பற்றிய விவகாரம். எந்த மாநிலம் ஆனாலும் சட்டசபையே மிக பாதுகாக்கப்பட்ட பகுதி. ஆனால் சட்டசபை வளாகத்திலேயே காலிஸ்தானி கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.
சட்டசபையையே பாதுகாக்க முடியாத பிஜேபி எப்படி மக்களை பாதுகாக்கும். இது ஹிமாச்சல பிரதேச மக்களை அவமதிக்கும் செயலாகும். பிஜேபி மற்றும் அதன் கூட்டணிகள் குண்டர்களை பாதுகாக்க முயன்றுவருகின்றன. பிஜேபி தலைவர்கள் குண்டர்களை காப்பாற்ற ஓடுகிறார்கள்.(தஜிந்தர் பாஹாவை குறிப்பிடுகிறார்). மக்களை எப்படி காப்பாற்ற முடியும்.
இமாச்சல பிஜேபி அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சியில் நீடிக்க உரிமையில்லை. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடையவர்களை எதிராக விரிவான விசாரணை நடத்த வேண்டும். ஆம் ஆத்மீக்கு காலிஸ்தானுடன் தொடர்பிருப்பதாக கூறுகிறார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இவையெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்" என தெரிவித்தார்.
மற்றொரு ஆம் ஆத்மீ தலைவர் பரத்வாஜ் கூறுகையில் "காலிஸ்தான் கொடிகள் ஏற்றப்பட்டபோது போலீசார் தூங்கிக்கொண்டிருந்தார்களா. இந்த சம்பவத்திற்கு அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என கூறினார். பிஜேபி ஹிமாசலப்பிரதேச செய்தி தொடர்பாளர் ஆர்.பி சிங் செய்தியாளர்களிடம் " ஆம் ஆத்மீ பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியமைத்த பின்னர் காலிஸ்தான்களின் எழுச்சி அதிகரித்துள்ளது.
பாட்டியாலாவில் ,மலேரகோட்டலாவில், கர்னாலில், பைஸ்பூரில் காலிஸ்தானிகள் பிடிபட்டனர். இப்போது ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்திருக்கிறது" என கூறினார். முதல்வர் ஜெய்ராம் தாக்குர் " அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. அவற்றை ஆய்வுசெய்து வருகிறோம். ஹிமாச்சல பிரதேச மக்கள் அமைதி காக்க வேண்டும்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். உறுதியாக மற்ற மாநிலங்களுடனான எல்லைப்பாதுகாப்பு அமைப்பை மறுபரிசீலனை செய்வோம். எல்லைப்பாதுகாப்பை வலுப்படுத்துவோம்" என கூறியுள்ளார். விவசாயிகள் போராட்டம் முதல் சி.ஏ.ஏ போராட்டம் வரை பின்னாலிருந்து காலிஸ்தான் ஆதரவாளர்களை இயக்கியது ஆம் ஆத்மீ என்ற குற்றச்சாட்டு பலகாலமாக எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.