24 special

மிரண்டு போய் கிடக்கும் அறிவாலயம்....! அதிர்ச்சியில் ஆளும் கட்சி....!

Mkstalin
Mkstalin

நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு பெரும் புயலை அரசியலில் கிளப்பிய நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிற்கும் தமிழக DGP க்கும் கெடு விதித்து இருப்பது மேலும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.


அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றது தொடர்பான வழக்கில் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்தும் உச்சநீதிமன்றம் மார்ச் 16-ஆம் தேதி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் வழக்கின் விசாரணையை முடிக்க 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று தமிழக காவல்துறையை சேர்ந்த மத்திய குற்றப்புலனாய்வு தரப்பு உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி, “செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், “அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பார்கள். 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பார்கள். விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்ற தகவலை அரை மணி நேரத்தில் இங்கு அளிக்கவில்லையென்றால்  தமிழ்நாடு டிஜிபி மற்றும் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும். இல்லையெனில், சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றமே அமைக்கும் என்ற உத்தரவுடன் வழக்கை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

தற்போது தமிழக அரசிற்கு இரண்டு வாய்ப்புதான் இருக்கிறது ஒன்று தாங்களே குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வது அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றமே சிறப்பு குழுவை அமைக்கட்டும் என காலம் தாழ்த்துவது இரண்டில் எது நடந்தாலும் அது செந்தில் பாலாஜிக்கு எதிராக முடியும் என்பதால் அது செந்தில் பாலாஜியோடு மட்டும் நிற்குமா அல்லது வேறு சில கைகளும் சிக்குமா என்றே தற்போது பேசு பொருளாக இருக்கிறது.

தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி விஷயத்தில் அடுத்தடுத்து நடைபெறும் மாற்றங்கள் பெரும் பின்விளைவுகளை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் உண்டாக்கும் என்ற கருத்தால் செந்தில் பாலாஜி விஷயத்தை எப்படி எதிர்கொள்வது என தலையை பிய்த்து கொள்ளாத குறையாக மிரண்டு போயிருக்கிறதாம் திமுக தலைமை.