செந்தில்பாலாஜி விசாரணைக்கு அழைத்து சென்றது மற்றும் அண்ணாமலை நடை பயணத்தில் உண்டான மாற்றம் இரண்டும் தற்போது முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ள சூழலில் உளவுத்துறை கொடுத்த அறிக்கை தான் பெரும் திருப்புமுனையாக பார்க்க படுகிறது.
அண்ணாமலை நடை பயணம் தொடங்கியதில் இருந்து அண்ணாமலை பயணம் குறித்தும் தினமும் மாநில உளவு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலர் களத்தில் என்ன நிலவரம் என்பதை தொடர்ச்சியாக தனி செயலாளர் ஒருவருக்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் அண்ணாமலை நடைபயணம் முதலில் இரண்டு முக்கிய மாற்றங்களை உண்டாக்கி இருக்கிறது அண்ணாமலை என்ற பெயர் தற்போது சமூக ஊடகங்களை பயன்படுத்துப்பவர்களை தாண்டி கிராமங்களில் வயதானவர்கள் வரை சென்று அடைந்து இருக்கிறது.
இனி அண்ணாமலை குறித்து தகவலும் பாஜக குறித்த செய்தியும் மக்கள் மத்தியில் கவனிக்க தகுந்த செய்தியாக மாறி இருக்கிறது. மேலும் கவனிக்கதக்க விஷயம் என்ன என்றால் பிரதமர் மோடியின் திட்டங்கள் எது என்று பல தமிழக மக்களுக்கு தெரியாமல் இருந்தது.
ஆனால் அண்ணாமலை ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் நேரடியாக பயனாளிகள் யார் என கண்டறிந்து அதில் ஒரு பகுதியை மேடையில் ஏற்றி வாழ்த்து அட்டை கொடுக்கிறார். இதன் மூலம் பலருக்கு மோடி திட்டங்கள் என்ன என்பது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.
பலருக்கு இதுநாள் வரை அரசாங்க திட்டம் என்றுதான் தெரிந்து இருந்தது இது மாநில அரசு திட்டமா அல்லது மத்திய அரசு திட்டமா என தெரியாமல் இருந்தது இப்போது அது மத்திய அரசின் திட்டம் என்பது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.
மேலும் செந்தில் பாலாஜி வழக்கில் கிராம மக்கள் வரை பலர் மத்திய அரசு சரியாக செயல்படுவதாகவும் ஏன் சும்மா இருந்தவா கைது செய்கிறார்கள் என்ற கருத்தை தான் அதிகம் கூறுகிறார்கள் எனவே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இன்னும் வைத்து இருந்தால் அது அரசிற்கு எதிராக மாறும் எனவும் குறிப்பிட்டி இருக்கிறதாம்.
மேலும் இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை அண்ணாமலையால் ஒரு மாற்றம் வரும் என நம்ப தொடங்கி இருக்கிறார்கள் எனவே மிக பெரிய மாற்றம் உண்டாக போவது தற்போது மெல்ல தெரிய தொடங்கி இருக்கிறது எனவும் தகவல் கொடுத்து இருக்கிறதாம்.இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆளும் திமுக தலைமை ஆலோசனையில் இறங்கி இருக்கிறதாம்.