24 special

அவசரமாக திமுக நிர்வாகிகளுடன் பேசிய முதல்வர்... மீட்டிங்கில் நடந்தது என்ன??

MKSTALIN
MKSTALIN

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தமிழகத்தில் தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக மின் கட்டணம் உயர்வு, மின் சேவைகளுக்கான கட்டணமும் உயர்வு, சொத்து வரி உள்ளிட்ட பல வரிகளும் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ளது அதன் தொடர்ச்சியாக சட்ட ஒழுங்கும் சீர்கேட்டு உள்ளது. இதனால் தமிழக மக்கள் திமுக மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அவர்களை ஏமாற்றியது வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது அதன் வெளிப்பாடாகவே நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளானது பாஜக பக்கம் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. 


இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் அதுவும் பழிவாங்கும் படுகொலைகள் இந்த ஆட்சியில் அதிகமாக நடைபெற்ற வருகிறது. ஒரு அரசியல் பிரமுகருக்கு இந்த தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகளை திமுகவிற்கு முன்வைத்து வருகின்றனர். அதோடு கள்ளக்குறிச்சி சம்பவமானது திமுகவை மேலும் பின்னோக்கி இழுத்துச் சென்றது அந்த சம்பவத்தின் பொழுது திமுக நிர்வாகிகள் ஒருவரை கூட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பார்க்க முடியவில்லை, ஆனால் தற்பொழுது மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை என்று திமுக நிர்வாகிகள் மற்றும் எம்பிகள் ஒவ்வொரு இடத்திலும் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை விமர்சித்திருந்தனர். 

இதன் மூலமே தனக்கு ஒரு பிரச்சனை தன் கட்சியால் ஏற்பட்ட ஒரு பிரச்சனை என்றால் தலை காட்ட மாட்டார்கள் இவர்கள்! ஆனால் மத்திய அரசை விமர்சிக்கலாம் என்றால் உடனடியாக முந்திக்கொண்டு வருவார்கள் என்பது இதன் மூலமே தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக தொடர் கொலைகள் மற்றும் அதனால் அதிர்ச்சி அடைந்த மக்களை சமாளிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் பல அரசு ஊழியர்களை அவ்வப்போது இடமாற்றம் செய்து வருகிறது திமுக அரசு! இதற்கிடையில் திருச்சி, கோயம்புத்தூரை தொடர்ந்து காஞ்சிபுரத்திலும் மேயர் பதவி திமுகவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

ஏனென்றால் திருச்சியில் திமுகவின் வேட்பாளரே மேயராக பதவி வகித்த போதிலும் திமுக கவுன்சிலர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு நிலவியதோடு திமுக மேயரை நீக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானமும் நிரைவேற்றப்பட்டது. 
அதோடு கோவை மேயர் தனிப்பட்ட விஷயங்களுக்காக மேயர் பதவியில் இருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் வரிசையில் காஞ்சிபுரத்திலும் மேயராக  உள்ள திமுக வேட்பாளரை மேயர் பதிவில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுகவின் கவுன்சிலர்களை நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றியது திமுகவிற்குள் நிலவுகின்ற உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த நிலையில் சமீபத்தில் திமுக அதிகாரிகளின் கூட்டத்தை திமுக தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சில விஷயங்களை மிகவும் காட்டமாக தனது நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது மக்களின் குறைபாடுகள் எல்லாம் எந்த அளவிற்கு தீர்க்கப்படுகிறது, ஒரு நாளைக்கு எத்தனை மனுக்கள் பெறப்படுகிறது, அதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது. நம்முடைய திட்டங்களுக்கெல்லாம் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்று பல கேள்விகளை கேட்டுள்ளாராம் அதுமட்டுமின்றி சில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு கூட உங்கள் பிரிவில் வேலை சரியாக செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது என்ன ஆயிற்று என்று தனித்தனியாக பெயரை குறிப்பிட்டு விசாரிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி கட்சிக்குள் இருந்து கொண்டு மாற்றுக் கட்சிக்கு வேலை செய்து வந்தவர்களின் பட்டியலும் முதல்வரிடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.