தமிழகத்தில் முக்கிய கட்சியாகவும் முதன்மை கட்சியாகவும் விளங்கி வந்த அதிமுக தற்போது இருக்கும் இடம் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகிறது. இதற்கு அதிமுக தலைமை தான் காரணம், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை திறம்பட செயல்பட வைக்காதது, மக்களுக்காக நாம் முன்வைக்கும் குரல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு போய் சேர்க்காதது, அம்மாவிற்கு அடுத்தபடியாக நிச்சயம் இந்த கட்சி உங்களுக்காக செயல்படும் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் அரசியல் வட்டாரம் முழுவதும் கிசு கிசுக்கப்பட்டது. ஏனென்றால் கிட்டத்தட்ட பத்து தேர்தல்களில் அதிமுக ஜெயலலிதா அவர்களை இழந்த பிறகு தோல்வியடைந்துள்ளது. என்னது பத்து தேர்தல்களா என்று மலைப்பாக நீங்கள் பார்க்கலாம் உண்மையில் சமீபத்தில் நடந்த இரண்டு தேய்தர்களை தவிர்த்து அதற்கு முன்பாக கிட்டத்தட்ட எட்டு தேர்தல்களிலும் அதிமுக பங்கேற்று தோல்வியை தருகிறது அதிலும் தற்போது நடைபெற்ற விக்கிரவாண்டி தேர்தலிலும் மீண்டும் தோல்வியைப் பெற்று தோல்வி லிஸ்டில் விக்ரவாண்டியும் சேரக்கூடாது என்பதற்காக தேர்தலை புறக்கணித்தது.
அதாவது 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு நடைபெற்ற ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் அதிமுக தோற்றது 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அந்த ஆண்டில் நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 சட்டசபை தேர்தல் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னதாக 2020 கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடை தேர்தல் மற்றும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் என தொடர்ச்சியாக 10 தேர்தல் களில் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது அதுவும் லோக்சபா தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு தமிழகத்தின் முக்கிய மற்றும் முதன்மைக் கட்சி டெபாசிட்டையும் பல தொகுதிகளில் இழந்தது! இதனை அடுத்து விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிக்க வேண்டும் என்று தலைமை ஆலோசித்து அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை அதிமுக அவ்வப்போது நடத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தின் ஆளும் கட்சியாக உள்ள திமுக அதற்குள்ளாகவே தமிழக பொது தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு குழுவை ஏற்பாடு செய்து மாநிலச் செயலாளர்களின் கூட்டத்தையும் நடத்தி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. ஆளும் கட்சி இவ்வளவு வேகமாக இந்த தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பது வேறு அதிமுக தொண்டர் மற்றும் நிர்வாகிகளை மேலும் அப்சட்டில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பற்றி தன் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக இரண்டாம் கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி சமீபத்தில் முதல் கட்ட ஆலோசனை நடந்து முடிந்துள்ளது.
அந்த ஆலோசனையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மனம் திறந்து பேசலாம் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என்று எடப்பாடி கூறியதால் மாவட்ட நிர்வாகிகள் பல மாநில செயலாளர்களுக்கு எதிராகவும் முன்னாள் மந்திகளுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். அதோடு தேர்தலின் தோல்விக்கு தலைமை தான் காரணம் என்று அடுத்தது எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து பேசி உள்ளனர். இது மாநிலச் செயலாளர்கள், அதிமுகவின் சீனியர்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரண்டாம் கட்ட ஆலோசனையில் தோல்வி குறித்து மட்டும் பேச வேண்டும் மற்ற விவகாரங்கள் குறித்து பேச வேண்டாம், எப்படி 2026 தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பது குறித்து பேசுங்கள் என்று கட்சியினரிடம் அதிமுக தலைமை கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் இப்படித்தான் தலைமையையே குற்றம் சாடுவீர்களா என்று எடப்பாடி பழனிசாமி கோபம் கொண்டு இரண்டாம் கட்ட ஆலோசனையில் பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தலைமை மீது பெரும் அதிருப்தி இருப்பதும், பலர் அடுத்த கட்சி தாவது குறித்த ஆலோசனைகளில் இருப்பதும் தெரியவந்துள்ளதாக அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி தகவல் சென்றுள்ளது இதனால் தேர்தல் வரையாவது தன் கட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி சீனியர்களுடன் சந்திப்புகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.