24 special

பர்வீன் சுல்தானா முழு சங்கியாக மாறிய தருணம்....! வீடியோ வைரல்...!

modi, parveen sultana
modi, parveen sultana

ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. பல நீதிமன்ற போராட்டங்களில் சந்தித்த பிறகு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதிகள் பெறப்பட்டவுடன் 2019 பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கான அடி கல்லில் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து மிகவும் தீவிரமாகவும் பல கலை நயத்துடன் ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டுமான பணிகளில் நெருங்கிக் கொண்டிருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுடன் திறக்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியானதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார் என்றும் அறிவிப்பு கள் வழியாக அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியை தவிர கிட்டத்தட்ட 7000 முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கான தேதி குறிக்கப்பட்டதிலிருந்து ராமர் கோவிலை என்று திறப்போம் என்று எதிர்பார்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இதனை வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் பல வகையில் கொண்டாடி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து நிதியும் அலங்கார பொருட்களும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ராமர் கோவிலில் நிர்வாகியான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அமெரிக்காவில் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அந்த வரிசையில் கும்பாபிஷேக விளம்பரங்களும் ராமர் படத்துடன் அமெரிக்காவின் பல நகரங்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதோடு  தமிழகத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு அழைப்பிதழ்கள் முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் ராமர் கோவில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சூப்பர் ஸ்டார் கும்பாபிஷேக விழாவில் தனது குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கு பிரபல நடிகரான சிரஞ்சீவியும் இது குறித்த தகவலை தெரிவித்து அதில் நான் எனது குடும்பத்துடன் நிச்சயமாக கலந்து கொள்வேன் என்றும் அவர் கூறியது பல வரவேற்புகளை பெற்றது. அதுமட்டுமின்றி ராமரை குறித்து மலையாள முன்னணி நடிகரான மோகன்லால் உற்சாகமிக பாடலை பாடியதும் சமூக வலைதளத்தில் வைரலானது. 

இப்படி பலவாறு ராமர் கோவிலை குறித்தும் ராமரை குறித்த செய்திகளும் வைரலாகி வரும் நிலையில் தீவிர இடது சாரியாக இருந்த பர்வின் சுல்தானா சமீபத்தில் ராமரை குறித்து ஒரு மேடையில் பேசியது விமர்சனங்களை பெற்றுள்ளது, அதாவது பர்வீன் சுல்தானா ராமரை குறித்து மிகைப்படுத்தி பேசி உள்ளார், ராமர் ஒருவரை பார்த்தால் அவர்கள் அப்படியே மயங்கி அவரது காலடியில் விழுந்து விடுவார்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு அவரது அழகும் பொலிவும் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் அதனாலே ஆழ்வார்களை நம்புகிறவர்கள் சொல்லுவார்கள் ராமரை விட மிக உயர்ந்தது ராம சௌந்தர்யம் என்று பரீவின் கூறியது பல விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் பர்வீன் சுல்தானாவும் சங்கியா? இதுவரை இடதுசாரியாக அறியப்பட்ட இவரும் சங்கியா என விமர்சனங்கள் எழுந்துள்ளது..