
கடந்த சில நாட்களாகவே பழனி திருக்கோவில் குறித்த பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டே வருகிறது. அதாவது முதலில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கீழ் வரும் அனைத்து கோவில்களிலும் செல்போன் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதோடு அவற்றை அரசு தரப்பில் கட்டணங்களுடன் கைபேசிகள் வாங்கி வைக்கப்படும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. இதேபோன்று பழனியிலும் தற்பொழுது கைபேசிகள் கட்டணங்களுடன் வாங்கி வைக்கப்பட்டு வருகிறது அந்த பணிகளில் ஈடுபடுபவர்கள் பக்தர்களிடமே பணம் கேட்பதாகவும் முறையாக கைபேசிகளை பாதுகாக்காமல் உள்ளனர் என்றும் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு முன்பாகவே பழனி கோவிலில் மலை ஏறும் பொழுது காவடி தூக்கி வரும் பக்தர்கள் நாதஸ்வரம் தவில் போன்ற வாத்தியங்களுடன் மேலே செல்லக்கூடாது என்றும் அவை அனைத்தையும் கோவில் அடிவாரத்தோடு நிறுத்திக் கொண்டு எந்த ஒரு இசைக்கருவிகள் இன்றி கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்றும் கூறியது பரபரப்பானது! காலம் காலமாக நாதஸ்வரம் மற்றும் தவிலுடன் இசை வாசித்துக் கொண்டே காவடி தூக்கி சென்று கொண்டு வருகிறோம் அப்படி இருக்கும் பொழுது இது என்ன புது விதிமுறையாக உள்ளது என்று பக்தர்கள் கேள்விகளை முன் வைத்திருக்கும் கோவில் நிர்வாகம் திறப்பில் கடுமையான வார்த்தைகள் கூறப்பட்டதாகவும் இதனால் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளிடையே சச்சரவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து பழனி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தையும் அகற்ற உள்ளதாக அரசு தரப்பில் வெளியான தகவல் மலை அடிவாரத்தில் வாழ்வாதத்திற்காக அமைத்திருக்கும் கடை உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி முன்பு கோவிலில் விதிக்கப்பட்டிருந்த கட்டணங்கள் அனைத்தும் தற்பொழுது அதிகரித்து இருப்பதாகவும் கைபேசியை பாதுகாப்பாக வைப்பதற்கு கட்டணம் செலுத்துகிறோம் அதற்கு மேலும் பணம் கேட்கிறார்கள் என்று பக்தர்கள் குற்றம் தெரிவித்ததோடு இப்படி எல்லாம் அறநிலையத்துறை அடிச்சு காசை பிடுங்கினால் உருப்படுவீர்களா என்று ஆதங்கத்தில் கொந்தளித்து சாபமிட்டார். மேலும் பக்தர்கள் அப்படி ஆதங்கத்துடன் பேசிய வீடியோகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில், இன்று பழனி முருகன் கோவிலில் மலையடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்த அறிவிப்பை வர்த்தகர்கள் சங்கம் நேற்றைய தினமே பழனி முருகன் கோவிலில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தனது வாழ்க்கையை நடத்தி வரும் சாலையோர கடை வியாபாரிகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்கள் அமைத்திருக்கும் கடைகளை அகற்றி வரும் அறநிலையத்துறையின் செயல்பாடு முறையற்றது என்றும் ஏற்கனவே அறநிலையத்துறையால் பல கோவில்கள் தங்களது சொந்த நிலங்களை இழந்து வரும் நிலையில் தற்போது பழனியும் இதில் சிக்கி விடுமோ என்ற சந்தேகங்களும் கேள்விகளும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. மேலும் அறநிலையத்துறையின் அராஜகத்தை எதிர்த்து யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்களா என பக்தர்கள் கொந்தளித்த அடுத்த இரண்டு மூன்று தினங்களிலேயே வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருப்பது பழனி வட்டாரம் முழுவதும் திமுகவிற்கு எதிரான அதிருப்திகளை ஏற்படுத்தும் என தெரிகிறது. ஏற்கனவே பொதுமக்கள் பலர் கோவிலுக்கு செல்லும்போது அறநிலையத்துறையின் ஏற்பாடு சரியில்லை என குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நிலையில் இப்படி வியாபாரிகள் வேறு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.