
இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருந்தாலும், என்றுமே குறைவு கிடையாது. அதிலும் காஷ்மீரை மையமாகக் கொண்ட பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது ! இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் அரசியல் சாசன விதி 370 ஐ நீக்கியதற்கு பாகிஸ்தான் கொக்கரித்து மேலும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதல்கள் படிப்படியாக குறைந்தது.ஆனால் காஷ்மீரின் வளர்ச்சியோ ஜெட் வேகத்தில் எகிறியது. இதை தாங்கி கொள்ள முடியாத பாகிஸ்தானும் அதன் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகளும் உள்ளூர் துரோகிகளும் சமயம் பார்த்துத் தாக்குதல் செயலில் ஈடுபட நினைத்தார்கள். இந்த நிலையில் மாநில அரசு செய்த தவறினால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தர இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும்? அந்த தாக்குதல்களில் இலக்கு என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்தது.இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டது
இந்நிலையில் தான் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் அரபிக்கடலில் நிலை நிறுத்தி உள்ளது. இந்தியாவின் சொந்த தயாரிப்பான ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் ,50 விமானம் 10 ஹெலிகாப்டருடன் கராச்சி அருகே நிலை கொண்டுள்ளது, ஒரு விமானம்தாங்கி கப்பல் தனியே செல்லாது அதனை சுற்று பாதுகாப்பு கப்பல்கள் சூழ நிற்கும், கீழே நீர்மூழ்கிகள் காவல் கொடுக்கும்இது பெரும் செலவும் நேரமும் பிடிக்கும் விஷயம் அதாவது மிக முக்கிய காலத்தில்தான் இந்த வியூகம் காட்டபடும் இதற்கிடையே தான் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ராஜினமா செய்து வருகிறார்கள்.
1971-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய ஐ.என்.எஸ். விக்ராந்தின் நினைவாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலுக்கு அதே பெயர் வைக்கப்பட்டது.ஐஎன்எஸ் விக்ராந்தை எடுத்து கொண்டால் இந்திய கடற்படையின் மிகவும் வலிமையான போர்க்கப்பலாகும். இந்த போர்க்கப்பல் என்பது கடந்த 2022ம் ஆண்டில் நம் கடற்படையுடன் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இது ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களாகும். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் ஒரே நேரத்தில் 30 போர்விமானங்கள் வரை நிறுத்த முடியும்.இந்த போர்க்கப்பல் மொத்தம் 18 அடுக்குகளையும், 2400 அறைகளைக் கொண்டிருக்கிறது. 1600 வீரர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கப்பலில் பெண் அதிகாரிகள், வீராங்கனைகள் தங்குவதற்கு ஏற்ற வகையிலான அறைகளையும் கொண்டுள்ளது.
இது உலக வலிமைமிக்க போர்கப்பல்களில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது, இந்த ஒரு கப்பல் போரில் ஈடுபடுத்தப்பட்டால் எதிர் நாட்டில் எந்த ஒரு இலக்கையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த நிலையில் இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் கையொப்பமானதுகடற்படையின் ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ போா்க் கப்பலில் நிலைநிறுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது இந்த மூவ் எதிரிகளை நடுங்கவிடும் இந்தியாவின் மாஸ்டர் மூவ் என கூறப்படுகிறது.