Politics

பாக் பக்கம் சென்ற சீனா. ... அசால்ட்டாக தட்டிவிட்ட இந்தியா. ... சத்தமில்லாமல் இறங்கிய இந்தியா!

pmmodi
pmmodi

பாகிஸ்தான் குறித்தும் அதற்கு உதவிக்கு வந்த சீனா குறித்தும் சமூக வலைத்தளத்தில் பரவும் கட்டுரை  என்ன நடக்கும் என பலரது கேள்விக்கு விடை கிடைத்து இருக்கிறது இது குறித்து கூறப்பட்டதாவது இந்தியா நிச்சயம் தாக்கும் என அஞ்சும் பாகிஸ்தானுக்கு சீனாவும், துருக்கியும் உதவிகரம் நீட்டுகின்றன. இது எதிர்பார்க்கபட்டதே, 1965 முதல் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்குமான நெருக்கம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வாயிலாக தொடங்கி பின் 1990க்கு பின் சீனாவின் ஒரு ஏழை மாகாணம் போல் பாகிஸ்தான் மாற்றபட்டுவிட்டது அதே நேரம் அமெரிக்காவின் அந்தபுரம் தீவிரவாதிகளின் சொந்தபுரம் என அதன் தோற்றம் இதுதான் என சொல்லமுடியாதபடி ஒரு கவர்ச்சி நடிகையின் வாழ்வு போல் ஆகிவிட்டது. 


இப்போது பாகிஸ்தானுக்கு துருக்கி சில ராணுவ உதவிகளை செய்கின்றது, சீனா இம்மாதிரி விஷயத்தில் ராஜதந்திர உதவி மட்டும் செய்யும் அதாவது ஐநாவில் பாதுகாப்பு, உலகளவில் பாகிஸ்தானை விட்டுகொடுக்காமல் பேசுதல் ஆகியன செய்யும் ஆனால் சல்லி காசு கொடுக்காது அதுதான் சீனா. துருக்கியின் எர்டோகன் பழைய சுல்தான் பாணியில் இருப்பவர், பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் அவர் கனவு, நேட்டோவில் உள்ள ஒரே இஸ்லாமிய நாடு என்பதால் சில பலங்கள் உண்டு "பே ராக்டர்" போன்ற ஆளில்லா விமானமெல்லாம் பிரசித்தி. 

இதனை பாகிஸ்தானுக்கு கொடுக்கலாம் இன்னும் சில பலங்களை கொடுக்கலாம் ஆனால் பாகிஸ்தான் ஜாதகத்தில் எந்த சிறப்பான ஆயுதமிருந்தாலும் வெற்றி என்பது ஒரு காலமுமில்லை. காரணம் பலமான ஆயுதம் மட்டும் வெற்றிகொடுக்காது, சிந்திக்க தெரிந்தவன் கையில் புல்லும் ஆயுதம், அவசரகுடுக்கை அரைவேக்காடுகள் கையில் எது இருந்தாலும் சிறக்காது. பாகிஸ்தான் 1965ல் அதிநவீன பேட்டன் டாங்கிகள், 1971ல் பிரமாண்ட ஹாஜி போர்கப்பல் என வைத்து முதலில் மிரட்டியது அவற்றோடு அன்று ஒப்பிடும்போது இந்திய தரப்பு பலம் குறைந்ததுதான் இருந்தது. ஆனால் பாகிஸ்தானிடம் இல்லாத ஒன்று இந்தியாவிடம் இருந்தது அது அறிவு மற்றும் வியூகம், இவற்றை கொண்டுதான் பாகிஸ்தானை ஓட அடித்திருக்கின்றது. 

போர்களத்தில் பலமான ஆயுதம் ஒரு வாய்ப்பே அன்றி அதுமட்டும் வெற்றியினை தீர்மானிக்காது, வீரர்களின் வியூகமும் சாதுர்யமுமே சாதிக்கும். அப்படித்தான் ஹாஜி கப்பல் மூழ்கடிக்கபட்டது, ப்ழைய ஓட்டை மிக் ரக விமானம் கொண்டு பலமான எப் 16 ரக விமானத்தை அபிநந்தன் சுட்டதும் அப்படித்தான். அதனால் துருக்கி, சீனா என ஏன் உலகமே திரண்டு ஆயுதம் கொடுத்தாலும் அது அந்த பிரபல அரசியல்வாதி கையில் கம்பன் பாடலை கொடுத்து படிக்க சொல்வதற்கு சமம் அன்றி வேறு ஏதும் நிகழபோவதில்லை. 

துருக்கி பாகிஸ்தானோடு இணைவது இன்றல்ல அது 800 ஆண்டுக்கு முன்பே நடந்தது, துருக்கியர் ஊடுருவல்தான் இங்கு துலுக்கர் என மருவிற்று. அன்று அதெல்லாம் நடந்திருக்கலாம் அதே கனவில் எர்டோகன் இப்போது வந்தால் அடி துருக்கிவரை விழும். துருக்கி வரை எப்படி விழும் என்றால் துருக்கியின் அண்டை நாடான கிரீஸுக்கும் இவர்களுக்கும் பல நூறாண்டு பகை, அதனால் கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் உறவுகள் நெருக்கம். 

இனி கிரீஸில் இந்தியாவின் ஆயுதங்கள் குவியும் அதை கண்டு தானே அலறி அடித்து ஓடுவா எர்டோகன் காரணம் இது மோடியின் இந்தியா எந்த அளவுக்கும் செல்லும். சீனா எப்படியான நாடு என்றால் எது லாபமோ அதைமட்டும் செய்யும், மெல்ல அதன் காதை கடித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உன் சாலைக்கு சிக்கல் வராது என ரகசியம் சொன்னால் "அப்படியா அப்படியானால் அவனை போட்டு சாத்து எனக்கும் அவனால் நஷ்டமே" என சொல்லிவிட்டு தன் போக்கில் சென்றுவிடும் சீனா. 

அதை மீறி அவர்கள் வந்தாலும் எளிதாக அடிக்கலாம், அவர்கள் ஆயுதபலம் எங்கும் நிருபிக்கபடவில்லை தரம் என்பது எங்கும் காட்டபடவில்லை, அனுபவமுமில்லை கையினை மூடிவைத்தே மிரட்டும் நாடு அது, கையினை திறந்துவிட்டால் ஓடிவிடுவார்கள். இதனால் சீனா துருக்கி ஆயுதம் பலமெல்லாம் இந்தியாவுக்கு விஷயமே அல்ல, ஆனானபட்ட அமெரிக்கா பாகிஸ்தானோடு இருந்தபோதே அதனை பந்தாடிய தேசத்துக்கு துருக்கி எல்லாம் விஷயமே அல்ல... என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.