24 special

கிடைக்கிற கேப்பில் ஆப்பு வைத்த அண்ணாமலை இப்போது புதிய அமைச்சர் சிக்கினார்..!

Stallin and annamali
Stallin and annamali

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அமைச்சர்களை கட்டம் கட்டி அடித்து வருகிறார், குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு முறை கேடாக ஒப்பந்தம் கொடுக்க முயன்றதாக அண்ணாமலை குற்ற சாட்டு வைக்க அது மிக பெரிய அளவில் எதிரொலித்தது


அதன் பிறகு   திமுக மாநிலங்களவை உறுப்பினர்ஆர். எஸ். பாரதி அண்ணாமலையை கைது செய்வோம் என மிரட்டல் விடுக்க நான் பாஜக அலுவலகத்தில் இன்று மாலை வரை இருப்பேன் முடிந்தால் கைது செய்து பாருங்கள் என சவால் விடுத்தார், இதற்கு முன்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலை திறக்கவேண்டும் என்ற அண்ணாமலை வைத்த கோரிக்கையை நிராகரித்து பேச பதிலுக்கு கோவில் நுழையும் போட்டம் நடத்த போகிறோம் என அண்ணாமலை எச்சரிக்கை விடுக்க மறுநாளே கோவில் திறப்பு பற்றிய அறிவிப்பு வெளியானது.

இப்படி ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களை நோஸ் கட் செய்த அண்ணாமலையிடம் புதிதாக ஒரு அமைச்சர் சிக்கியுள்ளார் அவர் சட்டததுறை அமைச்சர் ரகுபதி, ரகுபதி குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

குற்ற வழக்குகளை சந்திக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2004ல் நடந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை திறப்பில் பங்கேற்க திமுக எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதா அவர்களும் அன்று பங்கேற்கவில்லை. அவருடைய பெயரும் அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.

அப்படியிருக்க குற்ற வழக்கை சந்திக்கும் அமைச்சர் ரகுபதி மட்டும் இன்று உயர்நீதிமன்ற விழாவில் பங்கேற்கலாமா ? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தலைமை நீதிபதியுடன் அவர் பங்கேற்கலாமா ? இது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பி அண்ணாமலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருப்பதால் இதற்கு பதில் கூற வேண்டிய கட்டாயத்திற்கு அமைச்சர் ரகுபதி தள்ளப்பட்டு உள்ளார், மின்துறை அமைச்சரை தொடர்ந்து தமிழக சட்டதுறை அமைச்சரும் அண்ணாமலையிடம் சிக்கி இருப்பதாக இணையத்தில் கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.