24 special

எடப்பாடிக்கு வந்த அதிர்ச்சி தகவல்...!! பதவி நிலைக்குமா...?

edapadi
edapadi

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கோ வரான்டோ மனு எடப்பாடி பழனிசாமியை மட்டுமின்றி அவரை முன்னிறுத்திய அதிமுகவை சேர்ந்த பலரை பெரும் அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது மேலும் மிக தீவிரமான குற்றம் என்பதால் பதவி தப்புமா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.பழநி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், திண்டுக்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவருமான ஏ.சுப்புரத்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தில்  கோ-வாரன்டோ மனுவை தாக்கல் செய்து இருக்கிறார் அதில்,தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கும் பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழகமுதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.


இவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், தனது கல்வித் தகுதி மற்றும் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இதுபோன்ற விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு முழுமையாகத் தெரிவிக்காமல் மறைப்பது என்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தீவிரமான குற்றமாகும். அதுமட்டுமின்றி, நடத்தை விதிமீறலும் கூட.அதேபோல, கடந்த 2016-17 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் தனது வருமானத்தையும் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுவில் உண்மைத் தகவல்களை மறைத்தால், அந்த மக்கள் பிரதிநிதியை தகுதி நீக்கம் செய்யலாம் என பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பழனிசாமியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகளும் முறையாகப் பரிசீலிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்.எனவே, அவர் எந்த தகுதியின் அடிப்படையில் எடப்பாடி தொகுதி எம்எல்ஏ-வாகவும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும்.மேலும், அவரை தகுதி நீக்கம் செய்து, அவர் இதுவரை பெற்றுள்ள ஊதியம் மற்றும் இதர அரசு சலுகைகளைத் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இதே வழக்கில் பலர் இந்தியா முழுவதும் பதவியை இழந்து இருக்கிறார்கள் மேலும் தேர்தலில் போட்டியிடவும் பல்வேறு சிக்கல்கள் எழும் என்பதால் வழக்கை எப்படி எதிர்கொள்வது என  எடப்பாடி ஆதரவு வட்டாரங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம்.

அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கபட்டு இருப்பதால் இந்த வழக்கில் கட்டாயம் இரண்டு வருடத்திற்குள் தீர்ப்பு வரும் என்றும் வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோ வாரன் டோ மனுவில் தீர்ப்பு வெளியாகும் எனவும் நிச்சயம் சொத்து விவரங்களை மறைத்தது உறுதியாகும் எனவும் வழக்கு தொடர்ந்த தரப்பு அடித்து கூறுகின்றது.இனி அதிமுக என்றால் நான் தான் என இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எம் எல் ஏ பதவியே தப்புமா என்ற நிலை தற்போது உருவாகி இருக்கிறது.