லியோ படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அந்த படம் வெளியாவதற்கு முன் பல சச்சரவுகளில் சிக்கியது எல்லோருக்கும் தெரிந்தது. தற்போது அந்த வரைசாயில் மேலும் ஒரு புதிய சிக்கல் அந்த படத்திற்கு எழுந்துள்ளது. அதாவது படத்தின் சிறப்பு கட்சிகளுக்கு அனுமதி கொடுத்தாலும் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில், தளபதி விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்உடைத்துள்ள படம் "லியோ" இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
முக்கிய காரணம் லோகேஷ் எடுக்கவும் படத்தில் ரத்தம் நிறைந்த காட்சிகள், இருக்கும் படம் ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்பாக கதைகளம் நகரும் இதனாலே ரசிகர்கள் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்திற்கான புரொமோஷனில் இதுவரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் துணை இயக்குனர் இருவர் மட்டுமே முழு வீச்சியில் இறங்கியுள்ளனர். படத்திற்கு ஆடியோ வெளியிட்டு விழா இல்லை என்ற போதும், விஜய் கெட்ட வார்த்தை பேசிய போதும் எழுந்த சர்ச்சைக்கு விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
படக்குழுவினர் மட்டும் தனியார் சேனலுக்கு பேட்டி கொடுக்கையில் படத்தின் மீதான ஹைப்பை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது லியோ படத்தை பார்க்க வருபவர் அனைவரும் தியேட்டருக்கு காலதாமதம் கடக்காமல் சீக்கிரம் வந்து பாருங்கள் படத்தின் டைட்டில் கார்டு போட்ட அடுத்த 10 நிமிஷம் பயங்கரமாக இருக்கும் என்று தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நேற்று படத்திற்கான புக்கிங் தொடங்கியது குறித்து அறிவிப்பு வெளியாகும் முன்பே அனைத்து தியேட்டரிலும் முதல் நாளுக்கான டிக்கெட் விற்று தீர்ந்தன.
படத்திற்கு என்னதான் ஹைப்பு இருந்தாலும், முன்னணி ஹீரோக்களின் படம் வெளியாகும் முதல் நாளில் ரசிகர்களுக்கு என்று ஒரு சிறப்பு காட்சிகள் ஒளிபரப்படுவது வழக்கம். அந்த வகையில் லியோ படத்திற்கு ரசிகர்கள் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. அதாவது இந்த வருடம் பொங்கலன்று தளபதி விஜயின் வாரிசு படமும், அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் துணிவு படமும் வெளியானது அன்று காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கு சிறப்பு காட்சியின் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரை விட்டார். அதனை முன் உதாரணம் படுத்தி லியோ படத்திற்கு ரரசிகர்களுக்கான சிறப்பு காட்சி தடை செய்யபட்டுள்ளது. இதனால் சோகத்தில் உள்ள ரசிகர்கள் அனுமதி கொடுத்தது போல் கொடுத்து ரசிகர்கள் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது திமுகவின் செயல் என்று திமுகவை சாடி வருகின்றனர்.
தற்போது வரை லியோ படத்தை வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருக்கிற நேரம் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி ஒளிபரப்ப வேண்டும் என்று கொடுத்திருக்கிறது. ரசிகர்கள் காட்சி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையில் எழுந்துள்ளது. இந்நிலையில் ரசிகர் காட்சிகளுக்கு அரசு புதிய விதிகளை வகுக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ரசிகர்கள் காட்சிகளின் போது வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களால் பிற உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. தியேட்டர் முன்பு பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் மேலும் நெருக்கடி விழுந்துள்ளது லியோ படத்திற்கு. இல்லை புதிய விதிகளை கொண்டு ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி அனுமதி வழங்கலாம் என்று கூறப்படுகிறது.