
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி வி சண்முகம் பொதுகூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்து பேசிய பேச்சு பாஜகவிற்கு பிரச்சனையை உண்டாக்யதோ இல்லையோ அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிரந்தர பொதுச்செயலாளர் கனவிற்கு முற்று புள்ளி வைத்து இருப்பது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபின் , சசிகலா, தினகரன் மற்றும் இபிஎஸ் ஓபிஎஸ் என்ற ஒன்றிணைந்த அதிமுக, தற்பொழுது மேலும் உடைந்து இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என்று நான்காக உள்ள நிலையில், தமிழக பாஜக திமுக அரசுக்கு எதிராக தினம்தோறும் பலவித போராட்டங்களையும் , பொதுக் கூட்டங்களையும் நடத்தி அதிமுகவின் உட் கட்சி பூசலில் தலையிடாமல், திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடையே பாஜக எடுத்து சென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்
அதிமுக வில் உள்ள உட்கட்சி பூசனினால் அதன் தொண்டர்களும், செய்வது அறியாது திகைத்து இருக்கும் பொழுது, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது , அரசியல் பார்வையாளர்கள் மற்றும் விமர்சனங்களும் இரு தலைவர்களும் தங்களது வேறுபாடுகளை கலைந்து ஒன்றிணைய வேண்டும் என்றும், அதுதான் அதிமுகவுக்கு நல்லது, இல்லையென்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இது திமுகவுக்கே சாதகமாக போகும் என்று சொல்லி வருகின்றனர்.
டிடிவி தினகரனும் சமீபத்தில் அளித்த பேட்டியில் திமுக என்ற தீய சக்தியை அழிக்க வேண்டுமானால், அதிமுக ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். அதனால் உண்மையான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றிணை வேண்டும் என்று கூறியிருந்த நிலையில்
பாஜக தலைவர் அண்ணாமலையும் பொது மேடைகளில் 2024 பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணி 25 இடங்களில் வெல்லும் என்று கூறி வருவதும், பாஜக தனித்து போட்டியிடுமா? பாஜக கூட்டணி ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அல்லது எடப்பாடி பழனிசாமி உடனான அதிமுகவுடன் என்றும் 2024 சட்டசபை தேர்தலில் மூன்று முனை போட்டி இருக்குமா ? இன்று பல ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்?
இந்நிலையில் அ இ அ தி மு கவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சி வி சண்முகம் பாஜக வுடன் தி மு க கூட்டணி வரும் என்றும், தி மு கவும் பாஜகவும் ஒன்று என்றும் கூறியுள்ளது . பலவித அதிர்வலைகளை இரு கட்சிகளிடம் ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் தமிழக துணைத் தலைவர் ஆன நாராயண திருப்பதி சிவி சண்முகம் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தி மு க அரசின் செயல்பாடுகளை தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் கடுமையாக விமர்சித்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக போராடி வரும் பாரதிய ஜனதா கட்சி எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சி வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை. மேலும், காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என்றெல்லாம் 'நிதானமில்லாமல்' பேசியுள்ளதும் அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் பாஜக குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என நினைக்கிறேன் என்று காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் பிரபல அரசியல் விமர்சகர் ஆன சுந்தர்ராஜ சோழன் தன் பங்குக்குNDA கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்று EPS அறிவித்தால் அங்கே கூடாரமே காலியாகிவிடும்.எங்களோடுதான் டெல்லி தலைமை உள்ளது.நாங்கள் செட் செய்வதுதான் அஜென்டா என EPS ற்கு தவறான அறிவுரை கொடுத்தவர்கள் யாரென தெரியவில்லை..சந்திரபாபு நாயுடுவை பார்த்தும் புரியவில்லை பலருக்கு என்று தன் கருத்தை கூறியிருக்கிறார்
பல அரசியல் பிரமுகர்களும் அரசியல் விமர்சகர்களும், 2024 தேர்தலில், மும்முனைப் போட்டி நடந்தால் அது ஒன்று திமுகவுக்கு அல்லது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று கருத்து சொல்லி வரும் சூழ்நிலையில். ஏற்கனவே பாஜகவின் நிலை எங்கள் பக்கம் தான் என்று இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ம் சொல்லி வந்த நிலையில் சிவி சண்முகத்தின் பேச்சு கூட்டணியில் உள்ளவர்கள் இடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்து தான் பேசினாரா? அல்லது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமலே அவருக்கு எதிராக அவர் அணியில் ஒரு லாபி நடக்கிறதா? இப்படித்தான் மேடையில் ஓபிஎஸ்ஐ விமர்சித்துப் பேசி இருவருக்கும் பெரும் பிரிவை உண்டாக்கினார் என்று அதிமுக தொண்டர்கள் மட்டத்திலேயே பேச்சுக்கள் எழுந்திருந்தது. தற்பொழுது பாஜக திமுக கூட்டணியை விமர்சித்து ,பாஜக கூட்டணியில் ஒரு குழப்பத்தை உண்டாக்க பேசினாரா? என்று கேள்வி எழுப்பும் நிலையில் இதற்கு முன்னர் முனுசாமியும் பாஜகவிற்கு எதிராக பேசிய நிலையில் கெஞ்சாத குறையாக எடப்பாடி பழனிசாமி அவரை சமாதானம் செய்தாராம்.
இப்போது CVS எனப்படும் சிவி சண்முகம் வெளிப்படையாக பாஜக கூட்டணி விவாகரத்தை பொதுவெளியில் உடைத்து பேசியதன் மூலம் இனி டெல்லி சட்ட ரீதியாக எந்த கதவையும் பழனிச்சாமிக்கு ஓபன் செய்யாது என்பதால் எடப்பாடி பழனிச்சாமியின் நிரந்தர பொதுச்செயலாளர் கனவு அடியோடு உடைந்து போயிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்துகின்றனர்.