24 special

எது எப்படியோ...பிஜேபி பக்கம் விஜய் செல்கிறார் என சொல்லி சொல்லியே காரியத்தை முடிச்சுட்டாங்க..!

Vijay and udhayanithi stalin
Vijay and udhayanithi stalin

தமிழகத்தில் அரசியலோடு சினிமா துறையும் எப்போதும் பின்னி பிணைந்திருக்கும். எம்ஜிஆர் காலம் முதல் இன்று உள்ள விஜய் வரை அதற்கு விதிவிலக்கு அல்ல.


தீவிர திமுகா ஆதரவாளரான எஸ் ஏ சந்திரசேகர் மகனும் பிரபல நடிகருமான விஜய்,  விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்து, நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் அவரது இயக்கம் கணிசமான இடங்களை கைப்பற்றிய பொழுதே திமுக விற்கும் அவருக்குமான உரசல் பற்றிக் கொண்டது, மேலும் பல இடங்களில் நாளைய முதல்வரே என்று விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல சோசியல் மீடியாக்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் திமுக தொண்டர்கள், உதயநிதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் சலசலப்பையும்  ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த சூழ்நிலையில்,அஜித் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் வெளியிடுகிறது. அதே நேரத்தில் விஜய் படத்தை வேறொரு தனியார் நிறுவனம் வெளியிடுகிறது என்றும், அஜித் படத்தை உதயநிதி வெளியிடுவதால் விஜய்க்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போகும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.

விஜய் படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தன் பங்குக்கு உதயநிதி விஜய் இடையே விரிசில் இருப்பது உறுதியாக இருக்கிறது, உதயநிதியை நேரடியாக சென்று சந்திக்க இருப்பதாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் கூடியது மேலும் பரபரப்பை கூட்டியது.

துணிவு படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாகவும், வாரிசு படத்துக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர் வாரிசு படத்துக்கு கிடைக்கவில்லை. பல்வேறு புள்ளிவிவரங்களின்படி விஜய் தமிழகத்தின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். ஆனால், அஜித்தின் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களை லாக் செய்துவிட்டு, வாரிசுக்கு போதுமான தியேட்டர்களை கொடுக்க பின்னர் என்றும், துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும்" என்று தில் ராஜூ கூறி இருந்தார். 

வாரிசு திரைப்படத்திற்கு அரசியல் அழுத்தம் உதயநிதி தரப்பில் கொடுக்கப்பட்டால் அரசியல் ரீதியாக திமுகவிற்கு எதிர் சித்தாந்த அரசியல் செய்யும் பாஜக பக்கம் ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கவும், பாஜக பக்கம் செல்லவும் விஜய் தரப்பு முடிவு எடுத்து இருப்பதாகவும் பல ஊடகங்கள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே யூகங்களாக கூறப்பட்டு இருந்த சூழ்நிலையில், 

தமிழகத் திரைப்படத் துறை ஒரு கட்சியின் பிடிக்குள் இருக்கின்றது என்ற விமர்சனமும், பிரபல நடிகரான விஜய்க்கே இந்த நிலைமையா? விஜய் வேறு விதமாக முடிவு எடுத்தால் 2024 பாராளுமன்ற தேர்தலில் பாதகமாக அமையும் என்ற ரீதியில் பலரும் பலவிதமாக பேசிய நிலையில்தற்போது வாரிசு படத்தின் சென்னை உட்பட நான்கு இடங்களின் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 

மீண்டும் வாரிசு படத்தை வெளியிட்டதன் மூலம் சோசியல் மீடியாக்களில் திரைப்படத்துறை ஒரு பக்கம் இருப்பது நிரூபணம் ஆகி உள்ளது, அவர்களின் ஆதரவு இல்லாமல் எவ்வளவு பெரிய நடிகரின் படம் இருந்தாலும்,  தியேட்டர்கள் கிடைக்காது என்று கூறி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல், 

தன் படங்களின் மூலமாக குட்டிக்கதைகளை சொல்லி, அடிக்கடி மத்திய அரசு எதிராக பேசிய விஜய் தற்பொழுது முற்றிலுமாக தன் படத்திற்காக சரண்டர் ஆகி விட்டார் என பலவிதமாக கருத்துக்களை கூறி வருகின்றனர் இதெல்லாம் ஒரு புறம் இருக்க.. விஜய் பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் ரசிகர்களை சந்தித்தது உதயநிதிக்கு எதிராக என அவரது ரசிகர்களே பேசிவந்த நிலையில் தற்போது அதே பனையூர் பண்ணை வீட்டில்தான் விஜயின் வாரிசு திரைப்படத்தில் சென்னை விநியோக உரிமையை உதயநிதி தரப்பு கைப்பற்றி இருக்கிறதாம்.

தென் மாவட்டத்தில் துணிவு திரைப்பட விநியோகத்தையும் சென்னை சிட்டிகுள் வாரிசு விநியோகத்தையும் அதிக படுத்துவோம் என ஒருமித்த கருத்திற்கு உதயநிதி தரப்பு அழைப்பு விடுக்க சத்தமில்லாமல் விநியோக உரிமையை விட்டு கொடுத்து சரண்டர் ஆகி இருக்கிறாராம் விஜய் என்கின்றன கோடம்பாக்க வட்டாரங்கள்.