தற்போது தமிழக அமைச்சர்கள் அனைவரும் அடுத்தடுத்த படியாக சிக்கலில் மாட்டி வருகிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவர்கள் முந்தைய ஆட்சி காலத்தில் பண்ண ஊழல்கள் தான் என தகவல்கள் வெளிவருகின்றன.
முக்கியமாக திமுக அமைச்சர்கள் அமலாக்கத்துறை, வருமானத்துறை மற்றும் குற்ற பிரிவு போலீஸ் மற்றும் நீதிமன்றங்கள் என அரசுத் துறையிடம் வரிசையாக சிக்கிக் கொண்டு வருகின்றனர். இதனால் ஆளும் திமுக தரப்பு பல இன்னல்களை சந்திப்பது மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் திமுகவின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை பிடியில் சிக்கி தப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டு வரும் நிலையில் அவருடைய மொத்த குடும்பமே அமலாக்கத்துறையிடம் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகம் சென்று குற்ற வழக்கு தொடர்பாக பதிலளித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் ஆகியோரின் வழக்குகளை நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணை செய்து வருகிறது இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வப்போது பேசும் சில திமுக அமைச்சர்கள் கூட அமலாக்கத்துறை பற்றி கேட்டாலே பதறி அடித்துக் கொண்டு காரில் ஏறி செல்லும் அளவிற்கு விசாரணை துறைகள் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பல அரசியல் தலைவர்களும் அரசியல் வல்லுனர்களும் அரசியல் விமர்சகர்களும் கூட அடுத்தபடியாக அமலாக்கத்துறை வசம் யார் சிக்க உள்ளார் என்பதை கணித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனியார் யூட்யூப் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது அமலாக்கத் துறைவசம் சிக்க உள்ள முக்கிய தலைகளைப் பற்றி கூறியுள்ளார் அதாவது வரிசையாக செந்தில் பாலாஜி அமைச்சர் பொன்முடி தங்கம் தென்னரசு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை தொடர்ந்து அடுத்து எந்த அமைச்சர் சிக்க உள்ளார் என்ற கேள்வியை நிகழ்ச்சி தொகுப்பாளர் சவுக்கு சங்கரிடம் எழுப்பிய போது சின்ன லீட் மட்டும் கொடுக்கிறேன் என்று கூறியதோடு அடுத்ததாக நம்ம மாப்பிள்ளை தான் என்று கூறியது தற்போது அரசியல் தலைவர்களுடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமலாக்கத்துறை வசம் சிக்கப்போகும் அடுத்த முக்கிய தலை மாப்பிள்ளை தான் என்று ன்று சவுக்கு சங்கர் கூறியதோடு மட்டுமல்லாமல் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் ரெடியாக என்னிடம் இருக்கின்ற போது அமலாக்கத்துறை வசம் இருக்காதா என்று கேள்வியை எழுப்பினார்.
இவ்வாறு மூத்த அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் இதுவரை அமலாக்கத்துறை விவகாரத்தில் கூறிய அனைத்தும் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியான உடன் ஈடி அவரை கஸ்டடியில் எடுக்கும் என்று ஆணித்தரமாக கூறினார் அதேபோலவே நடந்தது தற்போது இவர் இப்படி கூறியுள்ளதால் திமுக தரப்பு குறிப்பாக முதல்வர் குடும்பத்தினர் அனைவரும் கதி கலங்கி உள்ளனர் என விமர்சனங்கள் எழுந்துள்ளது..
இவ்வாறு சவுக்கு சங்கர் அடுத்ததுமாப்பிள்ளை தான் என்று முதல்வர் குடும்பத்தை குறிவைத்து கூறியது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது... குறிப்பாக இதுவரை அமைச்சர்கள்தான் கடந்த கால ஆட்சியில் நடந்த வழக்குகள் மூலமாக கைது செய்யப்படுகின்றனர் ஆனால் முதல்வர் மருமகன் மீது எந்த வழக்கும் இல்லையே பின்னர் எப்படி அமலாக்கத்துறை அவரை நெருங்கமுடியும் எனவும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.