உலக நாடுகள் மத்தியில் இந்தியா எவரும் எளிதில் செய்ய முடியாத ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதுவும் கடந்த முறை கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு திட்டம் தோல்வியை தழுவி வருத்தத்தில் மூழ்கியிருந்த இந்தியாவிற்கு இது புது தெம்பை அளிக்கும் வகையில் ஆரோக்கியமான வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாக தனது சுற்றுவட்ட பாதைகளை முடித்துவிட்டு நிலவின் பாதைக்குள் சென்று நிலவின் தென் துருவத்தை அடைந்து அங்கு சரியாக விக்ரம் லாண்டரை லான்ச் செய்தவுடன் பிரக்யான் வாகனம் தனது பணியை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்திடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வரும் இந்தியாவை நோக்கி பாகிஸ்தானில் இருந்து பொறாமை மற்றும் ஏக்கங்கள் நிறைந்த மூச்சுகள் காற்றில் பறந்து வருகிறது! அதுமட்டுமல்லாமல் சீனா அந்நாட்டின் திறன் மற்றும் பலன்களை தெரிவித்து இந்தியாவின் சந்திரயான் மூன்று விண்கலம் நிலவில் ஒரு நாளை கூட தாக்கு பிடிக்காது என்ற வகையில் கேலி செய்துவிட்டு இந்தியாவுடன் விண்வெளி தொடர்பான பணிகளை சேர்ந்து செய்ய சீன தயாராக உள்ளது என்ற தகவலையும் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியா இந்த உலக சாதனை படைக்கும் பொழுது பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் இந்த செய்தியை அறிந்த உடனே உடனடியாக இஸ்ரோ தலைமைக்கு அழைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார் மாநாடு முடிந்த பிறகு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தொலை கண்காணிப்பு மற்றும் கட்டளை கட்டமைப்பான இஸ்ட்ராக்கிற்கு சென்று இந்திய விண்வெளித் துறை குழுவினரிடம் உரையாற்றியுள்ளார். அதோடு இந்த வெற்றி இந்தியாவிற்கான வெற்றி மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்குமான வெற்றி என்று தெரிவித்தவர் சந்திரன் மூன்றின் லேன்டர் தர இறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்றும், சந்திரயான் இரண்டு தனது தடங்களை விட்டுச் சென்ற இடத்திற்கு திரங்கா என்றும் பெயரிட்டார்.
தற்போது பிரதமர் நரேந்திர மோடி வைத்த இந்த இரண்டு பெயர்களை கிண்டல் செய்யும் விதமாக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இதயராஜ் எம்எல்ஏ, பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவுக்குச் சென்று அங்கு விண்கலத்தை இறக்கி சோதனை செய்வது விண்வெளி ஆராய்ச்சியின் மிகப்பெரிய உச்சம். ஆனால் அதற்கு நேர் எதிராக தான் சார்ந்து இருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம் சார்ந்த ஒரு பெயரை அந்த இடத்திற்கு சூட்டியிருப்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு போகும் போது, இந்து மதம் தொடர்பான கோவில்களுக்கு போகும்போது, இந்து மதம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபடும் போது நீங்கள் இது போன்ற என்ன பெயர்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்; ஆனால் மதங்களையும், சடங்கு சம்பிரதாயங்களையும் கடந்ததுதானே அறிவியல். அங்கு போய் மதப்பற்றை திணிக்கலாமா? என்று ஒரு நீண்ட பதிவை பதிவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
இந்துக்களின் தெய்வமான சிவனும் சக்தியும் இணைந்தது தான் சிவசக்தி இந்த பெயரை பிரதமர் மோடி சந்திராயன் இறங்கிய இடத்திற்கு வைத்ததற்கு திமுகவின் எம்எல்ஏவாக உள்ள இனிகோ இதயராஜ் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதல்வருக்கு மீண்டும் பிரச்சினைகள் வெடிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காரணம் ஏற்கனவே திமுக இந்து சமய சடங்குகள் விவகாரத்தில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது இந்த நிலையில் இந்து கடவுள்களின் பெயரை பிரதமர் வைத்ததற்கு திமுக எம்.எல்.ஏ அதிருப்தி தெரிவித்தது கண்டிப்பாக விமர்சனங்களை எழுப்பும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது....